உள்ளூர் செய்திகள்

ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியால் மாணவ, மாணவியர் தெளிவு

இதில், நூற்றுக்கணக்கான பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஆசிரியர்கள் சொன்ன ஆலோசனைகளை குறிப்பு எடுத்தனர்.இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் கூறியதாவது:   லாரன்ஸ்(கணித ஆசிரியர், ஸ்ரீபெரும்புதூர்): நான் ஸ்ரீபெரும்புதூர் அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.ஆண்டுதோறும் தினமலர் சார்பில், காஞ்சிபுரத்தில் நடத்தப் படும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு என் சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவியரை அழைத்து வருவது வழக்கம். இந்த வருடம் காஞ்சிபுரத்தில் நடத்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால், திருவள்ளூரில் நடக்கும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 95 மாணவிகளை அழைத்து வந்துள்ளேன்.இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. தேர்வு பயம் நீக்கி சுமாராக படிக் கும் மாணவியரை கூட அதிக மதிப்பெண்கள் எடுக்க தூண்டுகிறது.மேலும் நானும் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கூறும் கருத்துக்களை குறிப்பு எடுத்து வகுப்பறையில் பாடம் நடத்தும் போது அவற்றை மாணவியருக்கு சொல்லி தருகிறேன். கே.சேகர் (தமிழ் ஆசிரியர், பேரம்பாக்கம்): நான் ஆறு ஆண்டுகளாக திருவள்ளூரில் நடக்கும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு 120க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை அழைத்து வருகிறேன். விடாமுயற்சி இருந்தால் மாணவர்கள் அனைவரும் வெற்றி அடையலாம்.இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு, தன்னம்பிக்கை ஊட்டுகிறது. மாணவர்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி படிப்பதை விட இதுபோல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் தன்னம்பிக்கை, புதிய அனுபவம் பெறுகின்றனர்.   கே.வி. சந்திரகலா: (கணித ஆசிரியை,கூனிப்பாளையம்): எங்கள் அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்து தற்போது இந் நிகழ்ச்சிக்கு 80 மாணவ, மாணவியரை அழைத்து வந்துள்ளேன். நான் இந்நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வந்துள்ளேன்.மாணவர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் இது ஒரு பயனுள்ள நிகழ்ச்சி. அடுத்த ஆண்டு நடக்கும் நிகழ்ச்சியிலும் அதிகளவில் மாணவர்களை அழைத்து வருவேன். கே. முருகைய்யன்(புவியியல் ஆசிரியர்,மணவாளநகர்): நான் ஒன்பது ஆண்டுகளாக காஞ்சிபுரம், திருவள்ளூரில் நடக்கும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கலந்து கொண்டுள்ளேன்.இதில் கலந்து கொள்வதால் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் கூட அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற முடியும். பொதுத் தேர்வில் எப்படி படித் தால் எளிதாக அதிக மதிப் பெண்கள் எடுக்க முடியும் என்பதையும்,நேரத்தை எப்படி சேமிக்க முடியும், எந்த கேள்விக்கு எவ்வளவு வினாடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் போன்ற சிறப்பான விளக்கங்களை ஆசிரியர்கள் அளிப்பதால் மாணவர்கள் தேர்வில் எந்தவித பதட்டம் இல்லாமல் தேர்வு எழுதுவதற்கு உதவியாக இருக்கிறது.தினமலர் சார்பில் நடத்தப் படும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் குழப்பம் நீங்கி தெளிவு மற்றும் தன்னம்பிக்கை பெற்று செல்கின்றனர்.பள்ளியில் கற்பிப்பதை விட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண் டால், மாணவர்களிடத்தில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. நாங்கள் பள்ளியில் பாடம் நடத்துவது,தேர்வு வைப்பது என பள்ளியின் பெரும்பலான நேரத்தை செலவிடுகிறோம்.ஆனால், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பதை சொல்லி தர மறந்துவிடுகிறோம். நாங்கள் விட்ட பணியை தினமலர் நாளிதழ் செய்கிறது. அதற்காக நாங்கள் தினமலருக்கு நன்றி தெரிவிக்கிறோம். நிகழ்ச்சித் துளிகள்...: * தினமலர் சார்பில் ஏழாவது ஆண்டாக "ஜெயித்துக் காட்டுவோம்&' நிகழ்ச்சி  திருவள்ளூரில் நடந்தது. * மணவாளநகர் கே.இ.என்.சி., அரசு மேனிலைப் பள்ளி மாணவர் பரத்வாஜ் அதிகாலை 3 மணிக்கும், அதே பள்ளியைச் சேர்ந்த ராஜலட்சுமி அதிகாலை 3.30 மணிக்கும் அரங்கிற்கு வந்தனர். * திருவள்ளூர், பூண்டி, சதுரங்கப் பேட்டை, ஒதப்பை, ஊத்துக் கோட்டை, பாலவாக்கம், மெய் யூர், கீழச்சேரி, கடம்பத்தூர், பண்ணூர், உளுந்தை, மேல் நல்லாத்தூர், வேப்பம்பட்டு, மணவாளநகர், செவ்வாப் பேட்டை மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் குழுக்களாக வந்தனர். * குளிரையும், பனிப்பொழிவையும் பொருட் படுத்தாமல் காலை 3.10 மணி முதல் மாணவ, மாணவிகள் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தின் முன் காத்திருந்தனர். * ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களது மாணவ, மாணவியரை அழைத்து வந்தனர். * பெற்றோர்கள் சிலர் பைக், சைக்கிள் ஆகியவற்றில் தங்களது பிள்ளைகளை அழைத்து வந்து மண்டப வாசலில் விட்டுச் சென்றனர். * சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் வர முடியாத காரணத்தால் அவர்கள் குறிப்பெடுத்தனர். * மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை கொடுத்தனர். * மாவட்ட எஸ்.பி., சாரங்கன் உத்தரவின்பேரில் மணவாளநகர் இன்ஸ்பெக்டர் சிவபாதசேகரன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படை, மகளிர் போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். * திருவள்ளூர் தீயணைப்பு கோட்ட அலுவலர் ஜீவானந்தம் உத்தரவின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் வீரர்கள் மண்டப வாசலில் தயார் நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்தனர். * கடந்தாண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியருக்கு தினமலர் சார்பில் வெள்ளி பதக்கம் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்