உள்ளூர் செய்திகள்

புத்தக அறிமுகம்: சிறுவர் கதைப் பாடல்கள்

வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். வாசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம். ஒவ்வொரு ஞாயிறும் தினமலர் இணையதளத்தில் இந்தப் பகுதி வெளிவரும்.01. சிறுவர் கதைப் பாடல்கள்தொகுப்பு ஆசிரியர்: கிருங்கை சேதுபதி,வெளியீடு: சாகித்ய அகாடமிசென்னை - 18.தொலைபேசி: 044 - 2431 1741பக்கம்: 232 விலை: ரூ.230ஆடிப் பாடும் சிறுவர்களுக்கு கதை கேட்பது கொண்டாட்டமாய் இருக்கும். அதுவும் பாடல் வழியே கதை சொல்லத் தொடங்கினால் சேர்ந்து பாடுவர். குழந்தைக் கவிஞர்களின், பல்சுவை கதைப் பாடல்கள் தீபாவளியின் தினுசு தினுசு பட்சணங்களாய் இந்த நுாலில் தரப்பட்டு உள்ளன. பல்சுவையுடன் சுவைத்து மகிழலாம்.எலி, பூனை, சிங்கம், முயல், ஆமை, பாம்பு, யானை போன்ற விலங்குகளும், கொசு, கோழி, காக்கை, குருவி, மயில், மைனா போன்ற பறவைகளும், கடவுளும் கதைகளில் வந்து கவர்கின்றன. &'கொழுக்கட்டை ஏன் வேகவில்லை...&' என்பதற்கு அந்தாதியாக விடை கூறும் நாட்டுப்புறப் பாடலில், &'எறும்பு கடித்தது&' விடையாக வருகிறது. இது சுவையைக் கூட்டுகிறது.கொசுவின் பெருமை, ஏப்பம் விட்ட குரங்கு, கடலின் ஆழம் போன்றவை இனிமை தரும் பாடல் கதைகள். பாட்டியின் பழம் பானைக்குள் புகுந்த எலி, நெல் தின்று மாட்டிக் கொண்டது சுவாரசியம். &'கள்ள வழியினில் செல்பவரை எமன், காலடி பற்றித் தொடர்வானடா!&' என்று முடியும் பாடல் மனதில் பதிகிறது.முரசுக் கட்டிலில் துயின்ற மோசிகீரனாருக்கு, சேரமன்னர் இரும்பொறை சாமரம் வீசிய, &'முரசும் அரசும்&' கதைப் பாடல், வரலாற்றை வளரும் தலைமுறைக்கு உரைக்கும். சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை வீட்டில் குன்றக்குடி அடிகளார் சிறுவயதில் பால் ஊற்றி, வறுமையை மாற்றிய, &'தினம் ஒரு திருக்குறள்&' தொகுப்பாசிரியரின் கதைப்பாடல் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. பாடவும், ஆடவும், நடிக்கவும் சிறுவர்களுக்கு பரிசாகத் தரவேண்டி நுால்.- முனைவர் மா.கி.ரமணன்02. பழ மருத்துவம்ஆசிரியர்: வீ.செந்தில்குமார்வெளியீடு: கோரல் பதிப்பகம்சென்னை - 109.அலைபேசி: 90430 50666பக்கம்: 112 விலை: ரூ.100கனிகளில் அடங்கியுள்ள சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் பற்றிய விபரங்கள் என்ற முகப்புடன் வெளிவந்துள்ள நுால். உணவே மருந்து என்ற தத்துவ அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.நுாலில், 36 கட்டுரைகள் உள்ளன. பழங்களின் பயன்பாடு, அவற்றில் உள்ள நுண் சத்துக்கள் விபரம், உடலுக்கு அவை தரும் ஆற்றல் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. உணவில் கவனம் கொள்பவர்களுக்கு உதவும்.03. கோயிலுக்குப் போகலாமா, சுட்டிகளே!ஆசிரியர்: பிரபு சங்கர்வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்,21, &'லட்சுமி&' சத்யசாய் நகர், மதுரை - 625 003.டோல்ப்ரீ: 1800 425 7700பக்கம்: 140 விலை: ரூ.150தாத்தா பேரக்குழந்தைகளோடு கோவிலுக்கு செல்லும்போது தொணதொணக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது போல அமைந்த நுால் இது. தோப்புக்கரணம், கைகளை துாக்கி வணங்குவது, விசாரசர்மன் சண்டிகேஸ்வரர் ஆன அதிசயம், பூமியில் புதையலாக கிடைத்த சைலாதி என்ற குழந்தை எட்டு வயதுக்கு பின் நந்தீஸ்வரர் ஆன கதை, மூன்றாம் பிறையை சிவன் தலையில் சூடிக் கொள்ள காரணம், அனுமன் சிந்துாரம் வச்ச கதை என குழந்தைகளின் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியான பதிலை சொல்லிக் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.உண்மையாகவே குழந்தைகளோடு கோவிலை வலம் வந்த உணர்வு ஏற்படுவது, ஆசிரியரின் அழகான கதையமைப்புக்கு உதாரணம். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் படிக்க வேண்டிய புத்தகம் இது.- எம்.எம்.ஜெ.,04. வள்ளுவத்தில் உவமை உலாஆசிரியர்: டி.வி.ராதாகிருஷ்ணன்.வெளியீடு: கங்கை புத்தக நிலையம்,23, தீனதயாளு தெரு, தி.நகர் , சென்னை - 17.தொலைபேசி: 044 - 2434 2810பக்கம்: 136 விலை: ரூ.120அணியிலாக் கவிதை, முகையிலா வனிதை என்பது பழமொழி. உவமையணியின் தோற்றம் மிகவும் பழமையானது. 36 உவம உருபுகளை கூறுகிறது தொல்காப்பியம். அதில், ஒன்று தான், &'போல&' என்ற உருபு.வள்ளுவர் கூறும் உவமைகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. முதல் குறளே எடுத்துக்காட்டு உவமையாக, வாழ்க்கையைப் பெருங்கடல் என விளக்க, பிறவிப் பெருங்கடல் என்று துவங்கும் குறளை காட்டுகிறார்.அமுதத்தைவிடச் சுவையானதாக, குழந்தைகளின் பிஞ்சுக் கைகளால் அளாவப்பட்ட கூழ் என்று விளக்குகிறார். கிணற்றின் ஊற்றுநீருக்கு கல்வி கற்றலைக் கூறுவதும், பெண்ணுருவத்தில் வந்து போர் செய்யக்கூடிய விழியம்புகளே, &'கூற்றுவன்&' என்று கூறுவதையும் விளக்கியுள்ளார். வள்ளுவத்தை மேலும் அறியத் துாண்டும் நூல்.- டாக்டர் கலியன் சம்பத்து05. ராக்கெட் தாதாஆசிரியர்: ஜி.கார்ல் மார்க்ஸ்வெளியீடு: எதிர் வெளியீடு96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 2.அலைபேசி: 99425 11302பக்கம்: 176 விலை: ரூ.190படுகை முதலாகப் பதினொரு கதைகளின் தொகுப்பு நுால். புதுமாதிரியாக எழுதுவதற்கு எடுத்த முயற்சியாக அத்தனை கதைகளும் இடம்பெற்றுள்ளன. மொழிநடை நம்மை இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்திற்கு இழுத்துச் செல்வது போல் அமைந்துள்ள தன்மையைக் காணமுடிகிறது. பத்திரிகையின் தேவைக்காக எழுதப்பட்ட கதைகள் இவை இல்லை; என்றாலும் ஒரு வகையான தேடலை எதிர்பார்த்து எழுதப்பட்டுள்ளது என்பதை இலக்கிய வாசகர்கள் எளிதில் உணர்ந்து கொள்வர். தமிழ்ச் சிறுகதையின் புதிய பரிமாணத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள தொகுப்பு நுால்.- முகிலை ராசபாண்டியன்06. தி காட்ஸ் ஆப் டைம்ஆசிரியர்: ஆர்த்தி சுந்தரம்வெளியீடு: ரைட்டர்ஸ் ஒர்க்ஷாப்162/92, லேக் கார்டன்ஸ், கோல்கத்தா - 700045பக்கம்: 308 விலை: ரூ.6006மகாபாரதம் தொடர்பான சம்பவங்களை, 39 அத்தியாயங்களில் விவரித்துச் செல்லும் ஆங்கில நுால். மையக்கதையிலிருந்து கிளைத்த பல்வேறு கதைகள் நாடகப் பாணியில் நகர்ந்து செல்வது சிறப்பு. ஹஸ்தினாபுரத்தை குரு வம்சம் ஆண்டபோது, கவுரவர்களுக்கும், கிருஷ்ணரின் ஆதரவு கொண்ட பஞ்சபாண்டவர்களுக்கும் நடந்த போரில் கையாளப்பட்டதே பிரம்மாஸ்திரம் எனப்படுகிறது.தருமத்தைக் காப்பதே காலங்களின் நோக்கமாகக் கூறி, யுக மாற்றத்தில் வரும் அதருமங்களை வீழ்த்தி, தருமத்தைக் காப்பதற்கான ஆயுதமாக பிரம்மாஸ்திரம் விளக்கப்படுகிறது. அசுர புத்திரன் ஆர்யமான், அக்னி மற்றும் வருண புத்திரர்கள் போன்ற பல்வேறு கதைமாந்தர்களுக்கு இடையிலான முரண்கள், தோழமைகள், உரசல்கள் போன்ற நிகழ்வுகளின் வருணனைகள் பலவும் காட்சிகளாக விரிகின்றன. கதைகளில் வெளிப்படும் அறிவுரைகள், சூழ்ச்சிகள் போன்றவை இன்றைய வாழ்க்கைச் சூழலிலும் நடைபெறுவது நோக்கத்தக்கது. புராணத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் படிக்கலாம்.- மெய்ஞானி பிரபாகரபாபு07. குழந்தையைப் பார்த்துக்கொள்ளவந்த பணிப்பெண்ஆசிரியர்: சைதை செல்வராஜ்வெளியீடு: மணிமேகலை பிரசுரம்தபால் பெட்டி: 1447,சென்னை - 17.தொலைபேசி: 044 - 2434 2926பக்கம்: 176 விலை: ரூ.150அன்றாடம் வாழ்வில் நிகழும் சம்பவங்களையும், சமூகச் சிக்கல்களையும் உள்வாங்கி எழுதப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால். சிறு சிறு நிகழ்வுகளை விவரித்து கூறியுள்ளது சலிப்பின்றி அமைந்து உள்ளது.குரங்குகள், தனிமையில், வீட்டுக்கணக்கு, ஓய்வு போன்றவை சற்று வித்தியாசமானவை. சமூக பொறுப்புடன் எழுதப்பட்டுள்ளது.- பின்னலுாரான்08. கணித மேதையின் கதைஆசிரியர்: முனைவர் வை.சங்கரலிங்கனார்வெளியீடு: நண்பர்கள் பதிப்பகம்அலைபேசி: 89253 35858பக்கம்: 87 விலை: ரூ.120பிரபல கணித மேதை ராமானுஜம் வாழ்க்கையில் நடந்த, 100 சம்பவங்களை தொகுத்து எழுதி நுாலாக்கப்பட்டுள்ளது. அரிய தகவல்கள் உள்ளன. படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. சாதனை அறிஞராக அவர் உருவாக உதவிய சம்பவங்கள் பல தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவை மிகவும் சுவாரசியமாக அமைந்துள்ளன. அனைவரும் படிக்க வேண்டிய நுால்.09. மாவீரன் நெப்போலியன்ஆசிரியர்: கமலா கந்தசாமிவெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை - 17.தொலைபேசி: 044 - 2433 4397பக்கம்: 160 விலை: ரூ.90மாவீரன் நெப்போலியனின் மறுபக்கத்தை காட்டுகிறது. சாகும் தருவாயிலும் சின்னஞ்சிறு அறையில் புத்தக குவியல் உடன் வாழ்ந்தான். குட்டித் தீவில் அஞ்ஞான வாசம் இருந்தபோதும், வரலாறு எழுத வந்தவரிடம் உருகினார்.ஆர்கானிக் விஷம் கொடுத்து ஆறு ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்பட்டான் என்பது தலைமுடியிலிருந்து, 140 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது. இது போல் ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் உள்ளன.கூரிய வாள் முனையை விட பேனா முனை வலிமையானது என்று கூறிய மாவீரன் நெப்போலியன் போனபார்ட்டின் வாழ்க்கையை விவரிக்கும் நுால்.- சுப்.வெங்க்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்