டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பல்வேறு துறையினரும் புகழாரம்!
சென்னை: &'தினமலர் நாளிதழ் கவுரவ ஆசிரியர், நாணயவியலின் தந்தையாக விளங்கிய டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, &'ஜெயித்துக்காட்டுவோம்&' போன்ற வழிகாட்டி நிகழ்ச்சிகள் வாயிலாக, நிபுணர்களாக வலம் வர வைத்தவர்&' என, பல்வேறு துறை நிபுணர்களும் புகழாரம் சூட்டியுள்ளனர்.இது குறித்து, அவர்களின் கருத்துக்கள்:மைசூரு ஏ.வி.நரசிம்ம மூர்த்தி, பெங்களூரு பாரதி வித்யா பவன் தலைவர் ராமானுஜம்:எங்களது மிக நெருங்கிய நண்பர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவு செய்தி கேட்டு, நானும், என் குடும்பத்தாரும் அதிர்ச்சிக்குள்ளாகினோம். அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடையவும், தாங்க முடியாத இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியை அளிக்கவும், இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தி.தேவநாதன் யாதவ்:நாளிதழ் வாயிலாக இளைஞர்கள் மத்தியில், தேசிய சிந்தனையை வளர்த்தவர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி. பன்முகத் திறன் படைத்தவர். தமிழுக்கு இவர் செய்த பணியை பாராட்டி, இந்திய மக்கள் கல்வி முனனேற்ற கழகம் சார்பில், 2017ல் பாரதியார் விருது வழங்கினோம். அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ்:தமிழ், நேர்மறையான பத்திரிகை மற்றும் நம் தேசத்தின் அனைத்து வளர்ச்சிக்கும் பங்களித்த சிறந்த ஆன்மா.டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியுடன், டாக்டர் கலாமின் முதல் வெளிநாட்டு பயணம் செய்தார். அப்போது, எனக்கு ஏற்பட்ட அனுபவம், என் நினைவில் இன்னும் தெளிவாக உள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.சந்தானம், தணிக்கையாளர், திருச்சி:ஆர்.கே., என் நண்பர், தத்துவவாதி, வழிகாட்டி. அவரின் மறைவு, தமிழகத்திற்கு பெரிய இழப்பு. உலகளவில் தமிழ் பேசும் மக்களுக்கு மிக பெரிய இழப்பு. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.டாக்டர் அர்த்தநாரி:மாமனிதர் மறைந்தார்; &'தினமலர்&' கவுரவ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மரணம் வேதனைக்குரிய செய்தி. தமிழ் மக்களுக்கும், &'தினமலர்&' வாசகர்களுக்கும், அவர் மறைவு ஈடு செய்ய முடியாதது.நான், அய்யாவை, 20 ஆண்டுகளாக அறிவேன். இதய நோய் மருத்துவராக சிகிச்சை அளித்த நேரத்தில், அவர் என்னிடம் காட்டிய அன்பும், பண்பும், நேசமும் அளவுக்கு அடங்காதவை.பல நேரங்களில், நான் அவரிடம் பல செய்தி களை கலந்துரையாடி உள்ளேன். சில அறிவுப் பூர்வமான புத்தகங்களையும், அவர் எனக்கு பரிசாக கொடுத்துள்ளார். ஆண்டுதோறும் மந்தைவெளியில் நாங்கள் நடத்தும் இலவச இருதய சிகிச்சை முகாமிற்கு தலைமை தாங்க வந்ததை மறக்க முடியாது.உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்க பொதுச்செயலர் உதயம்ராம்:தமிழ் பத்திரிகை உலகின் அழிக்க முடியாத அடையாளம், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி. பத்திரிகையின் தலைப்பு, அச்சு, வடிவம், செய்திகளை தரும் விதம், அதன் தரம் எல்லாவற்றிலும் புதுமையை புகுத்தியவர்.பத்திரிகை துறைக்கு இளைஞர்களை ஈர்த்த பெருமையும், &'ஜெயித்துக் காட்டுவோம்&' போன்ற வழிகாட்டு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டிய ஜாம்பவான்.பண்டைய நாணயங்கள் சேகரிப்பு ஆராய்ச்சி, அதுகுறித்த பல நுால்கள், அதன் வாயிலாக நம் தமிழர்களின் வாழ்வியல் விழுமியங்களை வெளிக்கொண்டு வந்த, அவரது உழைப்பு ஈடு இணையில்லை.தரம், நிரந்தரம், உண்மையை உரக்க சொல்ல வேண்டும், தேசியமும் தெய்வீகமும் தேசத்தின் இரண்டு கண்கள் போன்ற உரத்த சிந்தனைகளோடு இயங்கிய அவரின் மறைவு, நாணய உலகிற்கும், நாணயமான பத்திரிகை உலகிற்கும் பேரிழப்பு.மும்பை ஆர்.பி.ஐ., மியூசியம் பொறுப்பாளர் பி.வி.ராதாகிருஷ்ணன்:இரா.கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். இந்த துயர நிகழ்வில் இருந்து, வெளிவருவதற்கான சக்தியை, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு கடவுள் வழங்க வேண்டும்; இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.எழுத்தாளர் சந்திரிகா சுப்ரமணியன்:சிறந்த ஆய்வாளர், சிறந்த மனித நேயர், சிறந்த மனிதர், உங்கள் மறைவு பேரிழப்பு; என் வளர்ச்சியில் முதல் படி, ஊக்கம், அன்பு தலை வணங்குகிறேன்.பாரதி பாசறை மா.கி.ரமணன்:&'தினமலர்&' கவுரவ ஆசிரியர், தமிழ் நாணயவி யல் ஆய்வு நல்லறிஞர், பாரதி பாசறைக்கு நல் ஆதரவு தந்தவர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி. அவரின் மறைவுக்கு, பாரதி பாசறை யின் சார்பில் அஞ்சலி.பாமா எக்ஸ்பிரஸ் தலைவர் ஆர்.வி.ஜி.மேனன், இயக்குனர் பி.ஜே.செரியன்:&'தினமலர்&' கவுரவ ஆசிரியர், புகழ் பெற்ற அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம்.புவியியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் மிகவும் அறிவார்ந்த மாணவர். பின்னர், நாட்டின் சிறந்த நாணயவியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளராக மாறினார்.வள்ளி மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் சொ.ஆனந்தன்:சென்று வாருங்கள் ஆசிரியரே! தினமலரில் இன்று, 100க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் பட்டதாரிகள் வேலை பார்க்கும் நேரத்தில், அதன் முதல் இன்ஜினியர் பட்டதாரி நான் தான் என்பதில், எனக்கு இப்போதும் மிகப் பெருமை உண்டு.கடந்த, 1986 மார்ச்சில், முதன் முதலில் ஆர்.கே.,வை சந்தித்தேன். &'புனே மாடுலர் சிஸ்டம்&' என்ற நிறுவனம் தயாரித்த, &'போட்டோ டைப் செட்டிங்&' இயந்திரத்தில், தமிழ் எழுத்துருக்களை வடிவமைக்கும் பணியில், 1984ல் இருந்து ஈடுபட்டு வருவதாக, அவர் தெரிவித்தார்.அதன் இறுதி வடிவங்களை எனக்கு விளக்கியும், இனி இந்த தமிழ் எழுத்துருக் களை, கணினி வாயிலாக, &'தினமலர்&' குழுமத்தில் பயன்பாட்டுக்கு எடுத்து வர வேண்டிய திட்டங்களையும் விளக்கினார்.அப்போது, என் வயது, 21 தான். ஆனால், இப்படிப்பட்ட பெரிய பொறுப்பை என்னை நம்பி கொடுத்து, எனக்கு சொல்லிக் கொடுத்து, அனைத்து நிலைகளிலும் ஆதரவளித்து, என்னை உயர்த்திய பெருமகனார் அவர்.நீங்கள் சாதித்த பல அறிவார்ந்த துறைகளில், பல ஆயிரக்கணக்கான சிறந்த மாணவர்களை உருவாக்கி, ஊக்கம் அளித்து விட்டுச் சென்றுள்ளீர்கள். உங்கள் பாதையில், அவர்களின் பணிகள் தொய்வின்றி தொடரும்.சேலம் பாராமஹால் நாணய சங்க இயக்குனர் ஜி.சுல்தான்:மிக மிக துயரமான செய்தி கேட்டேன். சேலம் மாவட்டத்தில், முதல் முதலில், சேலம் பாராமஹால் நாணயச் சங்கத்தை துவங்கி வைத்தது, இந்தியாவின் மிகச்சிறந்த நாணய ஆய்வாளர் இரா.கிருஷ்ணமூர்த்தி.எங்களை வழி நடத்தி, உலக அரங்கில் நாணயங்கள் பற்றிய கட்டுரைகளை சமர்ப்பித்து, இந்தியாவிற்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர். என் இதய அன்பு ஆசான், &'தினமலர்&' கவுரவ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி.அவரின் மறைவு கேட்டு, மிக மிக வேதனை அடைந்தோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது துணைவியாருக்கும் ஆழ்ந்த இரங்கலை, கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறேன்.ராஜகீழ்ப்பாக்கம் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் சீதாராமன்:&'தினமலர்&' கவுரவ ஆசிரியர் மறைவுக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இன்று பல மாணவர்கள், கிருஷ்ணமூர்த்தியால் துவங்கப்பட்ட ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியால், பெரிய வல்லுனர்கள் ஆகி உள்ளனர். அவர் மறைந்தாலும், அவர் விட்டு சென்ற பணிகளை, அவரின் நல் ஆசிகளுடன் தொடர்ந்து செய்வோம் என உறுதி மேற்கொள்வோம்.தமிழ்நாடு செய்தித்தாள் விற்பனையாளர்கள் மற்றும் கிளை சங்கங்கள் தலைவர் கே.தேவேந்திரன்:&'தினமலர்&' நாளிதழின் கவுரவ ஆசிரியர் மற்றும் பத்திரிகை உலகில் தனி இடத்தை பெற்றவர் இரா.கிருஷ்ணமூர்த்தி. அவரது மறைவுக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.சென்னை சூளைமேடை சேர்ந்த ஆதிரை வேணுகோபால்:&'தினமலர்&' நாளிதழின் கவுரவ ஆசிரியரே. இதழியல் துறையில் பல புதுமைகளை புகுத்திய ஆசானே. சங்ககால நாணயவியலின் தந்தையே. தெய்வம் நிகர்த்த நாயகன் நீ. துயர்கள் துடைத்த துாயவன் நீ. நாயகனே, நீ விண்ணோடு உன் ஞாபகங்கள் மட்டும் எம்மோடு.பி.ஆர்.பி., குழுமத்தை சேர்ந்த பி.பழனிசாமி:பத்திரிகை துறையில் முத்திரை பதித்து வரலாற்றை உருவாக்கி, நாணயவியல் துறை நாயகனாக திகழ்ந்து வந்த, அய்யா இரா.கிருஷ்ணமூர்த்தியை இழந்துள்ளோம்.இந்த இழப்பு, ஒட்டுமொத்த பத்திரிகை துறைக்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பாக எண்ணி, நான் வருந்துகிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.சென்னையில் உள்ள, அமெரிக்க துாதரகத்தின், முன்னாள் அரசியல் ஆலோசகர் ஆர்.நடராஜன்:இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானது, அவரை அறிந்த நண்பர்களுக்கு வருத்தம் தரும் செய்தி. நான் அவரை, 1984ல் இருந்து அறிவேன். அவரை, பத்திரிகை ஆசிரியராக மட்டுமல்ல, ஒரு நாணயவியல் பேராசிரியராகவும் மதித்திருக்கிறேன்.அலட்டி கொள்ளாத சுபாவம் கொண்ட அறிஞர் அவர். அறவாணன் அறக்கட்டளை, 2002ல் முதன் முதலாக, &'தினமலர்&' கிருஷ்ணமூர்த்தி இதழாளர் விருது என்ற ஒன்றை அறிவித்த போது, ஆங்கில பத்திரிகையில் பணியாற்றி கொண்டிருந்த எனக்கு, அந்த விருதை பெற அறவாணனிடம் சிபாரிசு செய்தது, கிருஷ்ணமூர்த்தி என்று கேள்விப்பட்டேன். அது, எனக்கு பெருமையாக இருந்தது.நீதிபதி அழகப்பன்:இரா.கிருஷ்ணமூர்த்தி பத்திரிகை துறையின் ஞானி. அவர் ஒரு மூத்த கல்வெட்டு ஆய்வாளர்; புகழ்பெற்ற அறிஞர்; ஆர்வமுள்ள வாசகர்; எழுத்தாளர். அந்த நாட்களில் நான் அவருடன் சென்றதை நினைவு கொள்கிறேன். என்னால் என்னை ஆறுதல்படுத்த முடியவில்லை. எப்படி என்னால் முடியும்?முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன்:இரா.கிருஷ்ண மூர்த்தியின் மறைவு செய்தி, மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடைய, ஆதி பராசக்தியை பிரார்த்திக்கிறேன்.கரூர் வைசியா வங்கி முன்னாள் துணை பொது மேலாளர் ஆனந்த நடராஜன்:நேர்மையானவர், பணிவன்புடன் கூடிய மனிதாபிமானம் கொண்டவர், மக்களுக்கு சேவை செய்வதில், வயது முதிர்வை தாண்டி, மகிழ்ச்சியோடு ஈடுபட்டவர் ஆர்.கே.,ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடர, அவருக்கு கிடைத்த வாய்ப்பை துறந்து, அவரது தந்தையின் ஆலோசனையை கேட்டு பத்திரிகை துறையில் காலடி எடுத்து வைத்தவர். அவரிடம் இருந்து நாம் நிறைய நல்ல பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய பங்கு, தமிழ் சமூகம் உள்ளவரை, ஆர்.கே., அனைவரது இதயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்.நாணயவியல் ஆய்வாளர் டாக்டர் என்.கணேசன்:இரா.கிருஷ்ணமூர்த்தி சங்க காலத்தை தன் நாணயக் கண்டுபிடிப்புகளால் நிர்ணயித்த அறிஞர். என்றைக்குமே கணினி இணைய நுட்பங்களில், மற்ற பத்திரிகைகளுக்கு அவரது, &'தினமலர்&' நாளிதழ் எடுத்துக்காட்டு. சங்க கால நாணயங்கள் தொடர்பான ஆய்வு களை, அவரைப் போல யாரும் செய்தது இல்லை.சென்னை பல்கலை பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை முன்னாள் தலைவர் டாக்டர் கே.வி.ராமன்:டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பாக, நாங்கள் நீண்ட ஆலோசனை மற்றும் விவாதம் நடத்தி உள்ளோம். அன்றைய காலகட்டங்கள் மறக்க முடியாத ஒன்று.சென்னை பத்திரிகையாளர் சங்க பொதுச் செயலர் எல்.ஆர்.சங்கர்:&'தினமலர்&' நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், நாணயவியல ஆய்வாளருமான இரா.கிருஷ்ணமூர்த்தி யின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பத்திரிகையில் மாற்றத்தைக் கொண்டு வந்தவர். கணினிக்கு ஏற்ற வகையில் தமிழ் எழுத்துக்களை நவீனப்படுத்தி, தெளிவுமிக்க தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர். இவரது மறைவு தமிழ் பத்திரிகை உலகிற்கும், நாணயவியல் வரலாற்று ஆய்வுத் துறைக்கும் பேரிழப்பு.முன்னாள் டி.ஜி.பி., வைகுந்த்:நிறைகுடம் சாய்ந்ததே! &'தினமலர்&' கவுரவ ஆசிரியர் இரா.கிருஷ்ண மூர்த்தி திறமைகளின் உறைவிடமாகவும், குணங்களின் நிறைகுடமாகவும் பெருவாழ்வு வாழ்ந்தவர். அவர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். இந்த பேரிழப்பை தனித்த முறையில் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அறிஞர் கிருஷ்ணமூர்த்தியின் சாதனையும், சரித்திரமும் எந்நாளும் நிலைத்திருக்கும்.மடிப்பாக்கம் நாஞ்சில்நாடு வெள்ளாளர் நலச்சங்க செயலர் என்.சேகர்:நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி. பத்திரிகை துறையில் பல வரலாற்று சாதனை படைத்த அவரது மரணம் நமக்கும், பத்திரிகை உலகுக்கும் பேரிழப்பு.திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் அறக்கட்டளை:டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைந்தார் என்ற செய்தி கேட்டு, மிகவும் அதிர்ந்து போனோம். எங்களது ஆசிரமத்தின் மீது ஆழ்ந்த அன்பும், அரவணைப்பும் கொண்டவர். ஆசிரமத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவ முகாமிற்கு தொடர்ந்து பங்களித்தவர். எங்களுடனான அவரது உறவு நீண்ட காலமானது. ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்திற்கு, இந்த துயரத்தை தாங்கும் சக்தியை கடவுள் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.&'ரீச்&' அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் டி.சத்தியமூர்த்தி:டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவு தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று. 35 ஆண்டு காலமாக அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும். அவருடன் இணைந்து, நாணயவியல் சங்கத்தில் பணி புரிவதற்கான வாய்ப்பு கள் எனக்கு கிடைத்தன. மேலும், பாரம்பரியம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் விவாதித்திருக்கிறோம். இது எனக்கும் மிகப் பெரிய இழப்பு. இதிலிருந்து வெளி வர சில காலம் பிடிக்கும்.வாரணாசியில் உள்ள இந்திய நாணயவியல் சங்கத் தலைவரும், ஐதராபாதில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டெமிராஜா ரெட்டி:மிகச் சிறந்த பண்பாளர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைந்தார் என்ற செய்தி கேட்டு, மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவரது ஆய்வுகள் தமிழ் சமூகத்தின் பாரம்பரியத்திற்கானது மட்டுமல்லாமல், தென் மாநிலங்களின் கலாசாரம் மற்றும் இதர திராவிட நாணயங்கள் குறித்த கல்விக்கான வழியையும் வகுத்துக் கொடுத்தவர். அவரது இழப்பு தாங்க முடியாதது. அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்.தொழில்துறை பொருளாதார நிபுணர் எஸ்.விஸ்வநாதன்:டாக்டர் ஆர்.கே., மறைவு ஏற்றுக் கொள்ள முடியாத, மிகப் பெரிய இழப்பு. ஈடு செய்ய முடியாத இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியை, கடவுள் தங்கள் குடும்பத்தினருக்கு வழங்க பிரார்த்திக்கிறேன்.இது தவிர, ஆர்.ஏ.புரம் குடியிருப்போர் சங்க தலைவர் டாக்டர் சந்திரசேகரன், மதுரை பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல்கள் தலைவர் பி.சி.எம்.சந்தானம், அனிகா இன்டர்நேஷனல் ஆர்.கே.ஜெயின், புதுடில்லி பிரகதி இன்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த கே.எல்.அரோரா, முனீஷ் சோப்ரா உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.நாணயமானவர்!தென்கோடி இந்திய சரித்திரத்தைதான் தேடிய நாணயத்தின் வாயிலாய் வடகோடி பேரும் அறிய செய்தவர்வழுதி மாக்கோதை எனசாம்பலாய் பூத்திருந்தசங்க மன்னர்களின் சரித்திரத்தை புது சான்றுடன் நிரூபித்தவர்கடல் கடந்து வந்தவர்விட்ட காசுகளில்பண்டைய தமிழகத்தின் வணிக நீட்சியை கண்டெடுத்து சுட்டியவர். ஏட்டளவில் கிடந்ததமிழ் சீர்திருத்த எழுத்துகளை செயல் வடிவம் ஆக்கிசெந்தமிழுக்கு சிறப்பு சேர்த்தவர். நாளும் நீளும் நவீன அறிவியலுக்கு தமிழ் எழுத்துரு கண்டுதக்கதோர் அணி செய்தவர்பள்ளிப் பாடங்களில்புரிபடாத நுணுக்கங்களை பட்டறிவு சான்றோர் கொண்டு &'ஜெயித்து காட்டுவோம்&' பட்டறையின் மூலம்மாணவரை பட்டை தீட்டிய அறிஞர்.எழுத்தறிவித்தவர் மட்டும் இறைவன் அல்லசமூக அவலங்கள் களையஏடு நடத்தும் ஆசிரியரும் இறைவனேஅந்த இறை பணியில் நாற்பதாண்டுஉழைத்த நீங்கள்இறைவனடி சேர்ந்திருக்கிறீர்கள் அங்கேயும் உங்கள் ஆய்வும்ஆராய்ச்சியும் தொடருமோ?- இ.எஸ்.லலிதாமதிஆசிரியர் புகழ் வாழ்க!மணமிக்க &'தினமலர்&' ஆசிரியர்தாம்மண்மீது மகத்தான செயல்கள் செய்துகுணவானாய் வாழ்ந்துதன்னை நிலைநிறுத்திகுவலயத்தில் பெருமைகள் பலவே செய்தார். அனைவருமே அவர்பெருமை அறிவர் நன்றாய்!அகிலத்தில் அணையாத அகல்விளக்கு இணையில்லா அன்பாளர்; பண்பில் என்றும்ஏற்றந்தான் அவர் கொண்டார்; அகிலம் போற்றும்!கிருஷ்ணமூர்த்தி திருநாமம் புவன மெங்கும்.பொன்னெழுத்தில் பொறித்திட்ட உண்மை கண்டோம் உருவத்தால் உணர்வால்தான் மென்மை யானார்; உயர்வான கருத்தாலே மேன்மை யானார்; திருவாலே என்றுமேதான் பெருமை பெற்றார்! தீங்கறியா நற்குணத்தார் மறைந்தார் என்றேபெருஞ்செய்தி கேட்டக்கால் நம்ப வில்லை! பேராளர் பெரும்புகழ்தான் நீடு வாழ்க!- நீதிபதி மூ.புகழேந்தி