உள்ளூர் செய்திகள்

புதுச்சேரி என்.ஐ.டி.,க்கு திருச்சி என்.ஐ.டி., வழிகாட்டும்

புதுச்சேரி என்.ஐ.டி., அந்தமான் நிகோபார் தீவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடம் அளிக்கும் வகையில் செயல்படும் புதுச்சேரி, கோவா, புதுடில்லி, உத்தரகண்ட், மிசோராம், மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து, அருணாசல பிரதேசம், துர்க்காபூர் ஆகிய இடங்களில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் என்.ஐ.டி.,களைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய என்.ஐ.டி.,கள் தொடங்கி இரண்டு மூன்று ஆண்டுகள் வரை ஏற்கெனவே பல ஆண்டுகளாக  இயங்கி வரும் என்.ஐ.டி.,கள் உறுதுணையாக இருந்து வழிகாட்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லி என்.ஐ.டிக்கு வாரங்கல் என்.ஐ.டி,யும் உத்தரகண்ட் என்.ஐ.டி.க்கு குருசேத்ரா என்.ஐ.டி.யும் மிஜோராம் என்.ஐ.டி.,க்கு நாக்பூர் என்.ஐ,டி.,யும் மேகாலாயா என்.ஐ.டி.,க்கு சூரத்தும் மணிப்பூர் என்.ஐ.டி.,க்கு அகர்தலா என்.ஐ.டி.யும் நாகாலாந்து என்.ஐ.டி.,க்கு சில்சார் என்.ஐ.டி.,யும் அருணாசல பிரதேச என்.ஐ.டி.,க்கு துர்க்காபூரும் சிக்கிம் என்.ஐ.டிக்கு கோழிக்கோடு என்.ஐ.டி.,யும் உறுதுணையாக இருந்து வழிகாட்டும் பணிகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது. புதிய என்.ஐ.டி.களுக்கான கட்டங்கள் தயாராகாத நிலையில் உறுதுணையாகச் செயல்படும் என்.ஐ.டி.,களிலே முதல் பேட்ச் மாணவர்கள் படித்து முடிக்கும் நிலை இருக்கும். புதிய என்.ஐ.டி.கள், முழுமையாக உருவாக்கப்படுவதற்கு ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு என்.ஐ.டி.,க்கும் ரூ.250 கோடியிலிருந்து ரூ.300 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு என்.ஐ.டி., வீதம் உருவாக்கப்படும் நிலையில், பிற மாநில மாணவர்களுக்கான 50 சதவீத இடங்கள் என்று  2007-08ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்