இக்னோவில் பி.டெக்., மாணவர் சேர்க்கை நிறுத்தம்
தொலைநிலைக் கல்வி முறையில் இன்ஜினியரிங் படிப்பு வழங்கப்படுவது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) கேள்வி எழுப்பிவந்த நிலையில் இக்னோ இந்த முடிவை எடுத்துள்ளது. சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறை ஆசிரியர்களுக்கான கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., ஆகியவற்றின் நிலைப்பாட்டுக்கு பிறகு, மாணவர் சேர்க்கையை துவங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.