கிராமப்புற மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., கல்வி திட்டம்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 19வது ஆண்டு பட்டமளிப்பு விழா, நந்தம்பாக் கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன் வரவேற்றார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் பேசியதாவது:கடந்த 1835ம் ஆண்டு முதல் நாட்டில் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த 1840ம் ஆண்டு முதல் 1850ம் ஆண்டு வரை கோவா, கோல்கட்டா, மும்பை ஆகிய இடங்களில் மருத்துவக் கல்லூரிகளும், சென்னை, மும்பை, கோல் கட்டா ஆகிய இடங் களில் மருத்துவப் பல்கலைக்கழகங்களும் துவங்கப்பட்டன. <உலக அளவில் 2,164 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதில், 299 மருத் துவ பள்ளிகள் இந்தியாவில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 34 ஆயிரம் பேர் எம்.பி.பி.எஸ்., படிப்பிலும், 14 ஆயிரம் பேர் மருத்துவ உயர்க்கல்வி படிப்பிலும் சேர்க்கப்படுகின்றனர். இவர்களில் 709 பேர் சிறப்பு நிபுணர்களாக படிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு புதிய மருத்துவக் கல்வித் திட்டத்தை உருவாக்கியுள்ளது. கிராமப்புற மாணவர்கள் மட்டுமே இந்த கல்வி திட்டத்தில் படிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் இந்த கல்வி திட்டத்திற்கான பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படும். வெற்றிகரமாக இப்பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., (ரூரல்) என்ற பட்டம் வழங்கப்படும். கிராமத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு இவ்வாறு மருத்துவக் கல்வி அளிப்பதன் மூலம், கிராமங்களுக்கு சிறந்த மருத் துவ உதவி கிடைக்கும். இவ்வாறு கேதன் தேசாய் பேசினார். கேதன் தேசாய், இந்திய டென்டல் கவுன்சில் தலைவர் அனில் கோலி, ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் முடநீக்கியல் துறை அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுபகுமார் மார்த்தாண்டம், சென்னை, அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ப்ரீத்தா ரெட்டி, கோவை, கே.ஜி., மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம், சென்னை மருத்துவ கல்லூரியின் முன்னாள் குடல்சார் நோய் பேராசிரியர் அகமது அலி, சென்னை அரசு பொது மருத்துவமனையின் ரத்தம் சார்ந்த நோய் துறை தலைவர் டாக்டர் ராகவா பரத்வாஜ், கீழ் பாக்கம், ரைட்ஸ் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் பேராசிரியர் பாலகிருஷ்ணன், மெட் இந்தியா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சந்திரசேகர், கே.ஜே.மருத்துவ மனை, பொதுநல மருத் துவ நிபுணர் டாக்டர் ராமச்சந்திரன், நியூ ஹோப் மெடிக்கல் சென்டரின் பொதுநல மருத்துவ நிபுணர் டாக்டர் ராமச்சந்திரன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் பேராசிரியர் ராதாகிருஷ் ணன் ஆகியோர், மருத்துவ துறையில் ஆற்றிய சேவைகளை பாராட்டி, அவர்களுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தின் சார் பில், கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 12 ஆயிரத்து 103 மாணவர்களுக்கு பட்டம் பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. எம்.பி.பி.எஸ்., மாணவி அமுதா, இரண்டு தங்கப் பதக்கம், நான்கு வெள்ளிப் பதக்கம், ஐந்து ரொக்கப் பரிசுகள் பெற்றார். மாணவர், ஆதித்யா வேதாந்தம் மூன்று தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கம், நான்கு ரொக்கப் பரிசுகள் பெற்றார்.