உள்ளூர் செய்திகள்

பாரதியார் பல்கலையில் பாதுகாப்புக்கான புதிய படிப்பு!

அவர் கூறியதாவது: பல்கலையில், தன்னாட்சி அந்தஸ்து கோரி நான்கு கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. இப்பல்கலையிலுள்ள பாதுகாப்பு, ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்துக்கு (டி.ஆர்.டி.ஓ.,) வரும் விஞ்ஞானிகள் தங்கி ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு விடுதி கட்டப்படவுள்ளது. இதற்கென பல்கலை மானியக்குழு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. பாதுகாப்புக்கான புதிய படிப்பு: அடுத்த கல்வியாண்டு முதல் பாரதியார் பல்கலையில் ஸ்னோ பிசிக்ஸ் எனும் புதிய படிப்பு அறிமுகம் செய்யப்படவுள்ளது. கடும் குளிர், உஷ்ணம் போன்ற காலநிலைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது தொடர்பான பயிற்சிகள், இப்படிப்பில் கற்றுத் தரப்படவுள்ளது. மாதத்தில் 15 நாட்கள் கோவையிலும், மீதி நாட்கள் சண்டிகாரிலும் இப்படிப்புக்கான பயிற்சி அளிக்கப்படும். டிசம்பர் இறுதியில் இப்புதிய படிப்பு பற்றிய கலந்தாலோசனைக் கூட்டம், பல்கலையில் நடைபெறவுள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, மத்திய அறிவியல் ஆலோசகர் சரஸ்வத் பங்கேற்கின்றனர். வரும் கல்வியாண்டு முதல் டெக்ஸ்டைல் தொடர்பான முதுகலைப்பட்டப் படிப்பும், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான ஐந்தாண்டு படிப்பும் துவங்கப்படவுள்ளது. மூன்றாண்டுகள் இளநிலை பட்டப்படிப்பு அல்லது ஐந்தாண்டு முதுகலைப்பட்டப் படிப்பு என இரண்டு பிரிவுகளாக போட்டித் தேர்வுக்கான படிப்பு பிரிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்படிப்புக்கான பாடத்திட்டம் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், சமூகவியல், வரலாறு ஆகிய படிப்புகளை உள்ளடக்கியதாக புதிய படிப்பு வடிவமைக்கப்படுகிறது. இதற்கென பல்கலையின் நூலகம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குன்னூரில் புதிய கல்லூரி: குன்னூரில் உள்ள மாணவர்களின் உயர்கல்வி வசதிக்காக, அடுத்த கல்வியாண்டு முதல் அங்கு புதிதாக கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் துவக்கப்படவுள்ளன. 20 ஏக்கர் பரப்பளவில் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்கல்லூரிகளில் முதல் கட்டமாக வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்கள் துவங்கப்படும். 53 பல்கலை மாணவர்கள் பங்கேற்கும் தென் மண்டல கால் பந்தாட்டப் போட்டிகள், நவ., 25 முதல் நவ., 30 வரை பாரதியார் பல்கலையில் நடைபெறவுள்ளது. தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைக்கிறார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்