அண்ணா பல்கலை சட்ட விதிகள் திருத்தம்
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், 450க்கும் மேற்பட்ட கல்லுாரிகளுக்கான பாடத்திட்டம் உருவாக்கம், இன்ஜினியரிங் படிப்புகளை நடத்துவது, தேர்வு முறை, பட்டம் வழங்குவது உள்ளிட்டவை தொடர்பாக, ஏற்கனவே உள்ள பல்கலை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு படிப்புக்கும் பாடத்திட்ட மாற்றம் மற்றும் புதிய படிப்புகளை அறிமுகம் செய்தல் போன்றவற்றுக்கு, பேராசிரியர் குழு அமைத்து, உரிய முடிவுகள் எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. கல்லுாரிகளுக்கான தன்னாட்சி அந்தஸ்து வழங்கும் முறைகளில், கட்டுப்பாடுகளை கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தங்களுக்கு அண்ணா பல்கலையின் சிண்டிகேட் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டதால் விரைவில் அமலுக்கு வர உள்ளது.