உள்ளூர் செய்திகள்

நீலகிரி : கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை

ஊட்டி: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (06 ம் தேதி) விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிவிப்பு ,நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக இன்று (06.07.2023) ஒரு நாள் மட்டும் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்