உள்ளூர் செய்திகள்

பெரும்பாக்கம் ஐ.டி.ஐ.,யில் மகளிர் சேர்க்கை துவக்கம்

சென்னை: பெரும்பாக்கம், அரசு தொழிற் பயிற்சி நிலையம், 2019ல் துவங்கப்பட்டது. இங்கு, எலக்ட்ரீசியன், வெல்டிங், ஏசி மெக்கானிக், கணினி மற்றும் இருசக்கர வாகனம் பழுது நீக்கம் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.நடப்பு 2023-24 கல்வியாண்டில், புதிய தொழில்நுட்பம், 4.0 திட்டத்தில், பிராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், இன்டஸ்ட்டிரியல் ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன், பேசிக் டிசைனர் மற்றும் சி.என்.சி., மிஷினிங் டெக்னீசியன் மற்றும் எலக்ட்ரிக் வாகனம் பராமரிப்பு ஆகிய பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன. மொத்தம், 284 சேர்க்கை உள்ளது. இந்நிலையில், மகளிருக்கு 20 சதவீதம் ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மகளிருக்கான சேர்க்கை, இன்று துவங்குகிறது.ஐ.டி.ஐ., முதல்வர் அமரேசன் கூறியதாவது:ஐ.டி., நிறுவனங்கள் அதிகமுள்ள சோழிங்கநல்லுாரில், 4.0 தொழில்நுட்பத்தில், உடனடி வேலை வாய்ப்புக்கு ஏற்ற பாடப்பிரிவுகள் உள்ளன. மகளிர் சேர்க்கை துவங்குகிறது. மாதம், 1,750 உதவித்தொகை வழங்கப்படும். படிப்பில் சேர விருப்பமுள்ளோர், 99629 86696, 99529 54301 ஆகிய எண்ணில், காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்