உள்ளூர் செய்திகள்

இந்திய குடிமைப்பணி தேர்வு: வழிகாட்டுதல் நிகழ்ச்சி

நாமக்கல்: தமிழகரசின், நான் முதல்வன் திட்டத்தில், 1,000 பட்டதாரிகளுக்கு தேர்வு மூலம் மாதந்தோறும், 7,500 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இத்தேர்வு குறித்து மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் கல்லுாரி வேலைவாய்ப்பு வழிகாட்டு மையம் மூலமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட போலீஸ் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் கலந்துகொண்டு மாணவ, மாணவியர் இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு எவ்வாறு தயாராக வேண்டும்; குடிமைப்பணிகளின் வகைகள், பணிகளின் முக்கியத்துவம், தேர்வு தொடர்பான தகவல்கள், தமிழில் எவ்வாறு இத்தேர்வுக்கு தயாராவது என்பது குறித்து விரிவாக எடுத்துக்கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், இந்திய குடிமைப்பணி தேர்வு குறித்த அறிமுக புத்தகம் வழங்கினார்.கல்லுாரி தேசிய மாணவர் படை லெப்டினன்ட் சவுந்திரராஜன், உள்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், விலங்கியல் துறைத்தலைவர் ராஜசேகர பாண்டியன் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லுாரி வேலைவாய்ப்பு வழிகாட்டி மைய அலுவலர் வெஸ்லி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்