ககன்யான் இன்ஜின் சோதனை மகேந்திரகிரியில் வெற்றி
பணகுடி: பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நேற்று ககன்யான் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தின் இன்ஜின் சோதனை அவ்வப்போது இஸ்ரோ மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடை பெறுவது வழக்கம்.அதன்படி நேற்று மாலை பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் இன்ஜின் சோதனை 720 விநாடிகள் நடந்தது.சோதனை வெற்றிகரமாக நடந்ததாக விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை நடந்த ககன்யான் இன்ஜின் சோதனையில் இதுவே அதிகபட்ச வினாடிகள் கொண்டதாக கருதப்படுகிறது. இனிவரும் மாதங்களில் சோதனை வினாடிகள் எண்ணிக்கை அதிகரிக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.