உள்ளூர் செய்திகள்

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்டார தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் திருப்பதி, வட்டார செயலாளர் பிரிட்டோ முன்னிலை வகித்தனர். தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வித்தரத்தை பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடவும், தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணையவழி ஆன்லைன் தேர்வுகளை கைவிடவும், எமிஸ் இணையதளத்தில் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களை நிர்பந்திக்க கூடாது.காலை உணவு திட்டத்தை 6, 7 ,8ம் வகுப்பு மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கும் விரிவுபடுத்தவும், காலை உணவு திட்ட பணியிலிருந்து தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் விடுவித்து அத்திட்டம் சார்ந்த அனைத்து பணிகளையும் சத்துணவு ஊழியரிடம் வழங்க வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்புல்லாணி வட்டார கிளை சார்பில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டாரத் தலைவர் அன்புச்செல்வன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் முரளி மோகன், மாவட்ட செயலாளர் முனியசாமி, நிர்மலா, செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். சாந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்