மருத்துவ படிப்பு கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு
புதுச்சேரி: மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணத்தை உயர்த்த பெற்றோர், மாணவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் பிப்மேட்டில் நடந்தது. கல்வி கட்டண நிர்ணய குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணம்மாள் தலைமை தாங்கினார். சுகாதார துறை செயலர் பங்கஜ் குமார் ஜா, சார்பு செயலர் கந்தன், சட்டத்துறை அதிகாரி ஜான்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மாணவர் பெற்றோர் சங்க நிர்வாகிகள் முன் வைத்த கருத்துகள்:மருத்துவ கல்லுாரிகளில், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யாததால், கவுன்சிலிங் தள்ளிப்போகிறது. எனவே கல்வி கட்டணத்தை உடன் இறுதி செய்ய வேண்டும். அரசு இடங்களுக்கான கட்டணத்தை எக்காரணத்தை கொண்டும் உயர்த்தக்கூடாது. தனியார் மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக் கீட்டிற்கு 50 சதவீத இடங்களை பெற வலியுறுத்தப் பட்டது.