உள்ளூர் செய்திகள்

பல்கலை. அறிவுரையை புறக்கணித்தது ஆஸி அரசு

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஆஸி. பல்கலை. குழுமம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலிய அரசுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வெளிநாட்டில் இருந்து அங்கு வந்து பயிலும் மாணவர்களின் நிலை (குறிப்பாக இந்திய, சீன மாணவர்கள்) குறித்தும் அவர்களுக்கு ஏற்பட்டு வரும் பிரச்சினை குறித்தும் தெரியப்படுத்தியதாகவும் ஆனால் அரசு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.   இதைத் தெரிவித்த யுனிவர்சிட்டீஸ் ஆஸ்திரேலியா தலைமை செயலாக்க அதிகாரி கிலென் விதர்ஸ் கூறுகையில், ஆஸ்திரேலிய அரசு பல்கலைக்கழக குழுவின் அறிவுரைக்கு செவி சாய்க்கவில்லை. தற்போது ஊடகங்களில் பிரச்சினைகள் பேசப்படும்போது மட்டும் அவசரம் காட்டுகிறது என வருத்தம் தெரிவித்தார். ஏற்கனவே ஆஸ்திரேலியா ராணுவ முன்னாள் அதிகாரி ஒருவர் ஆஸியில் இந்தியர்கள் மீது நடப்பது இனவெறி தாக்குதல் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்