உள்ளூர் செய்திகள்

பருவநிலை மாற்ற பாதிப்பு பள்ளிகளில் விழிப்புணர்வு

பருவநிலை மாற்றத்தால், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதுகுறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இதைத்தொடர்ந்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:பள்ளிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்காப்பு மற்றும் பாதுகாப்புக்கான ஒத்திகை பயிற்சிகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும்.பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்தல், பிளாஸ்டிக் பாக்கெட்களை பிரிக்கும்போது, சிறு துண்டாக பிரிப்பதை தவிர்த்தல், மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்தல், வாகன புகை இல்லாத வகையில் சைக்கிள், மின்சார வாகன பயன்பாடு உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்