தகுதி தேர்வு சான்றிதழ் பதிவிறக்க ஏற்பாடு
சென்னை: தமிழக அரசு பள்ளிகளில், 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜனவரி, 7ல் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., இந்தத் தேர்வை நடத்துகிறது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில், நவ. 30ம் தேதி பதிவு முடிகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக, பட்டதாரிகள் தங்களின் தகுதி தேர்வு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ள, ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின், https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/ என்ற இணைய தளத்தில் நவ. 30ம் தேதிக்குள் பதிவிறக்கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.