உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை இளநிலை உதவியாளர்கள் சங்க கூட்டம்

பரமக்குடி: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்கள் ஒருங்கிணைப்பு மாவட்ட குழு கூட்டம் பரமக்குடியில் நடந்தது.இளநிலை உதவியாளர் ரத்தினவேலு தலைமை வகித்தார். முரளிதரன் முன்னிலை வகித்தார். பிரிட்டோ வரவேற்றார். பள்ளிக் கல்வித்துறையில் 4500 க்கும் மேற்பட்ட இளநிலை உதவியாளர்கள், உதவியாளர் பதவி உயர்விற்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கின்றனர். இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வரை டி.என்.பி.எஸ்.சி., மூலம் உதவியாளர் நேரடி நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். கடந்த 2013-14ம் ஆண்டு மட்டும் நேரடி நியமன முறைப்படி உதவியாளர் நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் தொடர்ந்து அந்த நிலை நீடிக்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செயலாளர் உள்ளிட்டோருக்கு மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது. பரசுராம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்