உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும்

மதுரை: நாம் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியின் 11வது பட்டமளிப்பு விழாவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பேசினார். இவ்விழாவில் முதல்வர் அல்லி அறிக்கை வாசித்தார். வேலம்மாள் கல்வி குழுமத் தலைவர் முத்து ராமலிங்கம் தலைமை வகித்து பேசியதாவது: பொறியியல் டிப்ளமோ படித்துவிட்டு 1986ல் சிறிய அளவில் பள்ளியை துவக்கினேன். அரசியல், தொழில், ஜாதி ஆதரவின்றி பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்களின் உதவியால் பெரிய நிறுவனமாக வளர்த்துள்ளேன். மாணவர்கள் படிப்பு மட்டுமன்றி அடுத்த நிலைக்கு உயர இலக்கை நிர்ணயித்து செயல்பட்டால் சாதிக்க முடியும். ஒழுக்கம் அவசியம் என்றார்.பட்டங்களை வழங்கி நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பேசியதாவது:பட்டம் பெறும் மாணவர்களுக்கு சவால்கள், வாய்ப்புகள் உண்டு. ஒழுக்கம் இருந்தால் சாதிக்கலாம். சவால்களை எதிர்கொள்ள முடியும். 140 கோடி மக்கள் தொகையில் 100 கோடிப் பேர் 18 முதல் 60 வயதுடைய உழைக்கும் வர்க்கத்தினர். இது சாதகமாக உள்ளது.இந்தியாவில் 100 கோடிப் பேருக்கும் வேலை, அரசுப் பணி கிடைக்காது. நாம் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும். இதற்கு வழிகாட்டுபவர்கள் உள்ளனர். நீங்கள் உழைத்து முன்னேற வேண்டும் என்றார். கல்விக்குழும முதன்மை முதல்வர் சுரேஷ்குமார் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்