உள்ளூர் செய்திகள்

முறைகேட்டை கண்டுபிடித்ததால் பொறுப்புக்குழு மீது வெறுப்பு?

கோவை: பாரதியார் பல்கலையின் கடந்த கால முறைகேடுகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை, தற்போதைய பொறுப்புக்குழுவும், உயர்கல்வித்துறை செயலரும் மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் அச்சமடைந்த சிலர், தனி ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் பல்கலையை கொண்டு வர வேண்டுமெனக் கூறி, இவ்விவகாரத்தை திசை திருப்புவதாக அதிருப்தி தெரிவிக்கின்றனர் கல்வியாளர்கள்.அதிருப்திகோவை, பாரதியார் பல்கலைக்கு கடந்த 2016ல், கம்ப்யூட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இவை, மொத்தமாக அல்லாமல் அவ்வப்போது, 50 எண்ணிக்கையில் வாங்கியதாக கணக்கு காண்பிக்கப்பட்டன.துணைவேந்தராக காளிராஜ் பதவி வகித்த காலத்தில் முறைகேடு நடந்ததாக கூறி விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டது. கம்ப்யூட்டர் கொள்முதலில் யார் மீது முறைகேடு புகார் கூறப்பட்டதோ, அவரையே விசாரணை கமிட்டியின் தலைவராகவும் நியமித்துள்ளதாக அப்போதே அதிருப்தி புகார்கள் கிளம்பின.அதன் பிறகும் இக்கமிட்டி விசாரணை நடத்தி, எந்த முறைகேடும் நடக்கவில்லை என அறிக்கை அளித்து, அவ்விவகாரம் அத்துடன் மூடப்பட்டது. அதே வேளையில், இப்புகார் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு சென்றது. அதில், முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டு, அதன் அறிக்கை லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உயர்கல்வித்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அந்த அறிக்கையை, பாரதியார் பல்கலை சிண்டிகேட் குழுவுக்கு அனுப்பி வைத்தது உயர்கல்வித்துறை. அதன் பிறகும், இவ்விவகாரம் கிடப்பில் போடப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களால் முறைகேட்டை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, உயர்கல்வித்துறை செயலர் அலுவலகத்திற்கு மீண்டும் புகார்கள் பறந்தன.இம்முறை விழித்துக்கொண்ட உயர்கல்வித்துறை, முறைகேட்டில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகளை துவக்கியிருப்பதாக தெரிகிறது. இவ்விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே முறைகேட்டின் முழுப்பின்னணியும் வெளியாகும் என்கின்றனர், கல்வியாளர்கள்.கலைக்க வேண்டும்அவர்கள் கூறியதாவது:துணைவேந்தர் இல்லாத நிலையில், பாரதியார் பல்கலையின் தற்போதைய பொறுப்புக்குழு நிர்வாகம் சிறப்பாகவே செயல்படுகிறது. முந்தைய சில துணைவேந்தர்களின் முறைகேடுகளை தற்போதைய பொறுப்புக்குழு கண்டறிந்து, அவற்றுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்படுவதால், இந்த பொறுப்புக்குழுவையே கலைக்க வேண்டும் என்று சிலர் குரல் எழுப்புகின்றனர்.தற்போதைய உயர்கல்வித்துறை செயலர் கார்த்திக், கம்ப்யூட்டர் கொள்முதல் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை துவக்கியிருப்பதால், பாரதியார் பல்கலை நிர்வாகத்தை அவரது கட்டுப்பாட்டில் இருந்து விலக்கி, தனி ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டுமென சிலர் கிளம்பியிருக்கின்றனர். இது, முறைகேட்டில் ஈடுபட்டோரை காப்பாற்றும் முயற்சி.இதற்கு முன், பாரதியார் பல்கலையில் தொலைதுார கல்வி மையம், யு.ஜி.சி., விதிமுறை மீறி நடத்திக் கொண்டிருந்த பல்வேறு படிப்புகளை நெறிமுறைப்படுத்தியதால் மாணவர் சேர்க்கை குறைந்தது. தற்போது யு.ஜி.சி., விதிகளுக்கு உட்பட்டு தொலைதுார கல்வி மையம் செயல்படுகிறது.சம்பந்தம் இல்லைமுன்னாள் துணைவேந்தர் ஒருவர் நிர்வாகத்தின் போது நடந்த நியமன ஊழல் காரணமாக, அனைத்து நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன் பின் வந்த பொறுப்புக்குழு நிர்வாகத்தின் போதும், துணைவேந்தர் காளிராஜ் காலத்திலும் நியமனம் நடக்கவில்லை.கோர்ட்டில் உள்ள வழக்குகளும், சட்ட சிக்கல்களுமே காரணம், இதற்கும், தற்போதைய பொறுப்புக் குழுவிற்கும் சம்பந்தம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்