உள்ளூர் செய்திகள்

மருத்துவ மாணவர் குறைகள் தீர்க்க கமிட்டி

மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க மருத்துவ மாணவர் குறைதீர் கமிட்டி அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு , மருத்துவ அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.மருத்துவ மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருவதால், அவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுவதற்கான காரணங்களை அறிய, சமீபத்தில் ஆய்வு நடத்தினோம். அப்போது தொடர் பணிச்சுமை, விடுதி பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்படுவது தெரிய வந்தது.இவை அவ்வப்போது ஏற்படும் காரணங்களாக இருப்பதால், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மருத்துவ மாணவர்கள் குறை தீர்க்கும் கமிட்டி அமைக்க வேண்டும். அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என தமிழ்நாடு , மருத்துவ அலுவலர் சங்கத்தின் செயலர், அகிலன் கூறினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்