உள்ளூர் செய்திகள்

அரசுப்பள்ளி மாணவருக்கு வயல்வெளி கள பாடம்

கீழக்கரை: ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை விவசாய வயல்வெளிகளுக்கு அழைத்துச் சென்று பாடம் நடத்தும் நிகழ்வு நடந்தது.தலைமை ஆசிரியர் தமிழரசி தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் பானுமதி முன்னிலை வகித்தார். வயல்வெளிகளுக்கு அழைத்துச் சென்று அங்கு வேலை செய்யும் விவசாயிகளிடம் விவசாயப் பணிகள், அதன் பயன் குறித்து கேட்டறிந்தனர்.வேலையின் செயலையும் அதன் அனுபவ பாடங்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. பள்ளி அறிவியல் ஆசிரியர் பானுமதி கூறியதாவது:பாடம் சார்ந்த கல்வியை நேரடியாக மாணவர்களை களத்திற்கு அழைத்துச் சென்று கற்பிக்கும் போது அவர்கள் புத்துணர்வோடு அறிந்து கொள்கிறார்கள். இதுபோன்ற கல்வி அவர்களது மனதில் எப்போதும் நிலைத்து நிற்கும்.ஏர்வாடி அரசு நடுநிலைப்பள்ளியில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக தேசிய திறனாய்வு தேர்வில் அதிகமான மாணவர்களை தேர்ச்சி பெற செய்து வருகிறோம். அதன் காரணமாக ஊக்கத்தொகை பெற்று வருகின்றனர். எங்கள் பள்ளி மாணவர்கள் தினமலர் நாளிதழின் பட்டம் இதழில் பொது அறிவு சார்ந்த பல்வேறு விஷயங்களை உள்ளதால் ஆர்வமுடன் பட்டம் இதழ் படிக்கின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்