உள்ளூர் செய்திகள்

யு டியூப் சேனல் துவக்க பயிற்சி

சென்னை: சொந்தமாக யு டியூப் சேனல் உருவாக்குதல், இணையதளத்தில் யு டியூப் சேனலை பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் குறித்து மூன்று நாள் பயிற்சி வகுப்பு, சென்னையில் நடக்க உள்ளது.தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இப்பயிற்சியை அளிக்கிறது. வரும் 29 முதல் 31ம் தேதி வரை, தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. கட்டணம் 4,000 ரூபாய்.ஆர்வம் உடைய தொழில் முனைவோர், 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் 10ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களைப் பெற விரும்புவோர், www.editn.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது 044 - 22252081, 22252082, 8668102600, 8668100181, 7010143022 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்