உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆசிரியர்களுக்கு தீத்தடுப்பு பாதுகாப்பு பயிற்சி

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு, தீத்தடுப்பு பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட்டது.கோவை மாவட்ட இளம் மழலையர் பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு, சங்க மாவட்டத் தலைவர் கவுதமன் தலைமை வகித்தார்.ஈரோடு லோட்டஸ் மருத்துவமனை மருத்துவர் செல்வன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ஸ்டெப்பிங் ஸ்டோன் மைய ஒருங்கிணைந்த கல்வியாளர் நீதா மோல், வகுப்பறை அணுகுமுறை மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த கல்வி குறித்துப் பேசினார். குழந்தைகளிடம் உள்ள நடத்தை பிரச்னைகள் குறித்து, பெர்க்ஸ் பப்ளிக் பள்ளித் தாளாளர் உஷா இளங்கோ பேசினார்.இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 40 மழலையர் பள்ளிகளைச் சேர்ந்த 160 ஆசிரியர்களுக்கு தீத்தடுப்பு பாதுகாப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்