உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்!

சென்னை: பள்ளிகள் விதிமுறைகள் படி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:பள்ளிகளில் வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், பள்ளி பஸ்கள் அனைத்தும் விதிகளின்படி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில், பள்ளி மாணவர்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்யவும், உரிய காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும், பாடநுால்கள் வழங்குவதையும், தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்