மாநகர மாஸ்டர் பிளான் மாணவருக்கு விழிப்புணர்வு
திருப்பூர்: செல்லப்பபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், திருப்பூர் மாஸ்டர் பிளான் 2024 உள்ளூர் திட்டக் குழுமம் சார்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. மங்கை பாரதி பதிப்பக நிறுவனர் கந்தசாமி தலைமை வகித்தார்.மாஸ்டர் பிளான் திட்ட அம்சங்கள், படக்காட்சிகளுடன் விளக்கப்பட்டது. உள்ளூர் திட்டக் குழுமத்தில் இணைக்கப்பட்டுள்ள சுற்றுப்பகுதி ஊர்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.ஆசிரியர் தலைமையாசிரியர் புவனேஸ்வரி, ஆசிரியர்கள் விஜயா, மரிய பிரகாஷ் உள்ளிட்டோர் பேசினர்.