அரசியல் அறிவு வளர்க்க முன்னெடுப்பு நிகழ்ச்சி
கோவை: கனவு தமிழ்நாடு இயக்கத்தின் புதிய முயற்சியாக, அரசியல் அறிவு என்ற முன்னெடுப்பு நிகழ்ச்சி, கோவையில் நடந்தது.தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்கும், மக்களின் மகிழ்ச்சிக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், புதிய அறிவுசார் தொழில்களை உருவாக்கியும், ஏற்கனவே இருக்கும் தொழில்களை அறிவுசார்மயப்படுத்தியும், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரத்தை, அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் நிறுவுவதே, கனவு தமிழ்நாடு இயக்கத்தின் இலக்கு.இதன் ஒரு பகுதியாக, இளைஞர்கள் அரசியல் குறித்த அறிவை முழுமையாக பெற வேண்டும் என்ற நோக்கில், 'அரசியல் அறிவு' என்ற முன்னெடுப்பு நிகழ்ச்சி, கோவையில் நடந்தது. உள்ளாட்சி சார்ந்த அரசு வீடியோக்கள் திரையிடப்பட்டு, அதுகுறித்த கலந்துரையாடல் நடந்தது.இதுகுறித்து, கனவு தமிழ்நாடு திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் கூறுகையில், சாமானிய மக்களுக்கு அரசியலமைப்பு, சட்டசபை, நீதிமன்றம், உள்ளாட்சி போன்ற அடிப்படை அரசியலை, எளிமையான வீடியோ வடிவில் கற்பிப்பதே, அரசியல் அறிவு முன்னெடுப்பு, என்றார்.