வேலையில்லா திண்டாட்டம்; எந்த மாநிலங்களில் அதிகம்
புதுடில்லி: நாட்டிலேயே வேலையில்லா திண்டாட்டம் அதிகம் உள்ள மாநிலம் கேரளா என ஆய்வறிக்கை தகவல் தெரிவிக்கிறது.இந்தியாவின் பொருளாதாரம் கணிசமாக உயர்ந்து வருகிறது. கோவிட் தொற்று உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும், இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக தான் இருக்கிறது. 10ம் இடத்தில் இருந்து, உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி உள்ளது.ஐ.எம்.எப்., கணிப்பு படி, 2025ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளி, 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். 2027ம் ஆண்டிற்குள் ஜெர்மனியை முந்தி உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிடுவோம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.ஜூலை 2023 முதல் ஜூன் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், வேலையின்மை விகிதம் குறித்து காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கை வெளியாகி உள்ளது.அதில் கூறியிருப்பதாவது: நாட்டிலேயே வேலையில்லா திண்டாட்டம் அதிகம் உள்ள மாநிலம் கேரளா.கேரளாவில், 15 முதல் 29 வயது வரை உள்ளவர்களில், 29.9 சதவீதத்தினருக்கு வேலையில்லை. இவர்களில் 47.1 சதவீதத்தினர் பெண்கள். மறுபுறம் மிகக்குறைந்த எண்ணிக்கையில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள் கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது.வேலையில்லா திண்டாட்டம் டாப் 10 இடங்கள்!* கேரளா- 29.9%* நாகாலாந்து- 27.4%* மணிப்பூர்- 22.9%* லடாக்- 22.2%* அருணாச்சல பிரதேசம்-20.9%* கோவா- 19.1%* பஞ்சாப்- 18.8%* ஆந்திரப் பிரதேசம்- 17.5%யூனியன் பிரதேசம்* லட்சத்தீவு- 36%* அந்தமான் நிக்கோபார் தீவுகள்- 33.6%வேலையில்லா திண்டாட்டம் குறைவு டாப் 10 இடங்கள்!* மத்திய பிரதேசம்- 2.6%* குஜராத்- 3.1%* ஜார்க்கண்ட்- 3.6%* டில்லி- 4.6%* சத்தீஸ்கர்- 6.3%* திரிபுரா- 6.8%* சிக்கிம்- 7.7%* மேற்கு வங்கம்- 9%* உத்தரப்பிரதேசம்- 9.8%