உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி பணியாளர்கள் பெற்றோருக்கு அறிவுறுத்தல்

உடுமலை: நோய்த்தொற்று இருக்கும் குழந்தைகளை, மையங்களுக்கு அனுப்ப வேண்டாம் என, அங்கன்வாடி பணியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.அனைத்து பகுதிகளிலும், தற்போது பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால், குழந்தைகள் எளிதில் நோய் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது.முன்னெச்சரிக்கையாக, பள்ளிகளில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்றுக்கான அறிகுறி சிறியதாக இருந்தாலும், டாக்டரை அணுகுவதற்கு ஆசிரியர்கள் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர்.இந்நிலையில், அங்கன்வாடி மையங்களிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பணியாளர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர். சில வீடுகளில் பெற்றோர் இருவரும் பணிக்குச்செல்வதால், குழந்தைகளை இம்மையங்களில் விட்டுச்செல்கின்றனர்.நோய்த்தொற்று ஏற்படும் போதும், இவ்வாறு விட்டுச்செல்வதால் மற்ற குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.இதனால், உடுமலை வட்டாரத்தில், குழந்தைகளுக்கு நோய்த்தொற்று சிறியதாக இருந்தாலும், குணமடைந்த பின் அங்கன்வாடிகளுக்கு அழைத்து வருவதற்கும், அதுவரை வரவேண்டாமென பணியாளர்கள் பெற்றோருக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.மேலும், கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களின் உடல்நலம் குறித்தும், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்