உள்ளூர் செய்திகள்

உல்லாஸ் திட்டத்தில் கருத்தாளர்களுக்கு பயிற்சி

புதுச்சேரி: டில்லி தேசிய கல்வியறிவு மையம், புதுச்சேரி மாநில கல்வியறிவு மையம் சார்பில் உல்லாஸ் திட்டத்தின் மாநில கருத்தாளர்களுக்கான இரண்டு நாள் திறன்வளர் பயிற்சி ரெட்டியார்பாளையம் அபி கிருஷ்ணா விடுதி அரங்கில் நடந்தது.மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார்.மாநில பயிற்சி மைய மூத்த விரிவுரையாளர் பூர்ணா தலைமை தாங்கினார்.​ தேசிய எழுத்தறிவு மைய முதுநிலை ஆலோசகர் யாச்னா குப்தா நோக்கவுரை ஆற்றினார்.உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அமன் சர்மா, ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட கல்லுாரி மாணவர்கள் உல்லாஸ் திட்டத்தில் தன்னார்வல ஆசிரியர்களாக பணியாற்ற உள்ள சேவையின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.தேசிய கல்வியறிவு மையத்தின் கருத்தாளர்கள் விபா கவுசிக், ஜோதி திவாரி ஆகியோர் பயிற்சி அளித்தனர். புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதியைச் சார்ந்த உல்லாஸ் திட்ட உதவி மாவட்ட அலுவலர்கள், கருத்தாளர்கள் பங்கேற்றனர்.உல்லாஸ் திட்டம் குறித்து பாட்டு போட்டி நடந்தப்பட்டு, வெற்றி பெற்ற ஆசிரியர்கள் சுரேஷ், முருகன் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டன.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்