உள்ளூர் செய்திகள்

கைரேகையால் உருவாகிய குழந்தைகள் தின ஓவியம்

பழநி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பழநி தும்பலபட்டி சங்கர் பொன்னர் நர்சரி பிரைமரி பள்ளி 3 -5ம் வகுப்பு மாணவர்கள் நேருவின் ஓவியத்தை கைவிரல் ரேகைகளால் வரைந்தனர்.43 மாணவர்கள் இணைந்து ஆறு அடி உயரம், நான்கு அடி அகலத்தில் நேருவின் உருவப் படத்தை கை ரேகைகளை பதித்து மூன்று மணி நேரத்தில் உருவாக்கினர்.மாணவர்களை சங்கர் பொன்னர் அறக்கட்டளை தலைவர் நடராஜன், செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் உதயகுமார், தலைமை ஆசிரியர் ரச்சுமராஜ் உதவி தலைமை ஆசிரியர் தெய்வநாயகி, நிர்வாக அதிகாரி சித்ரா, ஓவிய ஆசிரியர் விஜய், அறக்கட்டளை உறுப்பினர் முத்துச்சாமி,தமிழ் ஆசிரியை பொன்னுத்தாய், மேலாளர் தேனரசு பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்