உள்ளூர் செய்திகள்

தொழில் மையம் சார்பில் மானியத்துடன் கடன்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அரசு மானியத்துடன் கூடிய தொழில்கடன் வழங்கும் முகாம் நடந்தது.கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். பின், அவர் பேசுகையில், 'கள்ளக்குறிச்சி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 883.22 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டுமென ஆண்டுக்கடன் திட்ட அறிக்கையில் இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த செப்.30 வரை 596.89 கோடி ரூபாய், டிச.16 வரை 48.97 கோடி ரூபாய் வரை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் பட்டுவாடா வழங்கப்பட்டு இதுவரை 73.13 சதவீதம் முடிக்கப்பட்டது.மேலும் தற்போது 50 நபர்களுக்கு 318.58 லட்சம் ரூபாய் கடன் ஒப்புதல் செய்யப்பட்டு அரசு மானியமாக 86.32 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. திட்ட இலக்கை முழுவதுமாக அடைய ரூ. 237.36 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டி உள்ளது' என்றார்.மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்