உள்ளூர் செய்திகள்

மாநில போட்டியில் சிறப்பிடம் மாணவர்களுக்கு பாராட்டு

அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், 'சூழல் அறிவோம்' என்ற தலைப்பில், பள்ளி மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான வினாடி வினா போட்டி சென்னை பிர்லா கோளரங்கத்தில் நடந்தது.இதில், கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 8ம் வகுப்பு மாணவன் அஸ்வின்கிருஷ்ணா, 9ம் வகுப்பு மாணவன் பாலபூபேஸ் பங்கேற்று மாநில அளவில், நான்காம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர். இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.மாநில அளவிலான போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களை, பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்