காச நோய் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி: திலாசுப்பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில், சுகாதாரத் துறையின் தேசிய புகையிலை கட்டுபாட்டு திட்டம் மற்றும் தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டம் சார்பில் 'புகையிலையில்லா புதுச்சேரி' தலைப்பில் காச நோய் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தலைமையாசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜெயந்தி வரவேற்றார்.புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை டாக்டர்கள் ராதாகிருஷ்ணன், மகேஷ் சீனுவாசன் மற்றும் அஜேயா ஆகியோர் கலந்து கொண்டு புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.மேலும், காச நோயின் அறிகுறிகள் மற்றும் காச நோயை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பது குறித்தும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அலுவலர் மணிமாறன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். ஆசிரியர் கனகவல்லி நன்றி கூறினார்.