உலக எழுத்தறிவு நாள் மாணவர்களுக்கு பரிசு
சிதம்பரம்: வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் சார்பில் உலக எழுத்தறிவு நாள் கடைபிடிக்கப்பட்டது சிதம்பரம் அடுத்த திருநாரையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் ரேவதி தலைமை தாங்கினார். ஆசிரியர் பிரவீனா வரவேற்றார். வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன் எழுத்தறிவின் அவசியம் குறித்து பேசினார்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பாசிரியர் ஸ்டாலின் நன்றி கூறினார். தொடர்ந்து இளநாங்கூர் அரசுத் தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் விஜயா, ஆசிரியர் தேவி ஷகிலா உட்பட பலர் பங்கேற்றனர். அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பென்சில், பேனா, ரப்பர், ஸ்கேல் அடங்கிய எழுது பொருள் தொகுப்பு வழங்கப்பட்டது.