ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் பயிற்சி தொகை வழங்கப்படலை
விருதுநகர்: மக்கள் தொகை பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம், பயிற்சி தொகை வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதற்கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணி ஆக. 1 முதல் 31 வரை நடந்தது. கற்பித்தல் பணியையும் பார்த்துக் கொண்டு ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம, நகர பகுதிகளுக்கு சென்று, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதற்கட்டப் பணியை முடித்துக் கொடுத்தனர்.மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அரசாணையில், முதற் கட்டப் பணியை முடித்தவுடன் அதற்கான மதிப்பூதியம் ரூ.9 ஆயிரம், பயிற்சித் தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆசிரியர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு மேலா கியும் அதற்கான மதிப்பூதியம் வழங்கப்படவில்லை.எனவே மதிப்பூதியத்தையும், பயிற்சி தொகையையும் விரைந்து வழங்க ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.