உள்ளூர் செய்திகள்

இரண்டாம் பருவத்திற்கான நோட்டு, புத்தகம் வழங்கல்

ரிஷிவந்தியம்: சின்னக்கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான விலையில்லா நோட்டு, புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மகேஸ்வரி, துணைத் தலைவர் மணிமேகலை, முன்னாள் ஊராட்சி தலைவர் கவினா முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர் வட்டாரக் கல்வி அலுவலர் கஜேந்திரன் சிறப்புரையாற்றி, பள்ளியில் பயிலும் 78 மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் பருவத்திற்கான விலையில்லா பாட புத்தகம், நோட்டு உள்ளிட்ட விலையில்லா பொருட்களை வழங்கினார். உதவி ஆசிரியர் ஏசுதாஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்