அங்கன்வாடி குழந்தைகளுக்கும் அரசு கேக் வழங்கியிருக்கலாம்
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில் பெரும்பாலான துவக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இம்மையங்களில் 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் சத்துணவு சாப்பிட்டு, கல்வி கற்கின்றனர். பள்ளிகளில் வழங்கப்பட்ட கேக், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை.அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில், 'துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் பள்ளி மாணவ, மாணவியருக்கு மட்டும், கேக் வழங்கினர். ஆனால் அங்கன்வாடி மையங்களில் படிக்கும் எங்கள் குழந்தைகளுக்கு கேக் வழங்கவில்லை.சர்க்கரை பொங்கல் மட்டும் வழங்கப்பட்டது. இதனால் அங்கன்வாடி குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியரை ஏக்கத்துடன் பார்த்தனர்.கேக் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளுக்கும் கேக் வழங்கி இருக்கலாம்' என்றனர்.