பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
புதுச்சேரி: நெல்லித்தோப்பு அரசு உதவிபெறும் இமாகுலேட் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் ரபேக்காள்மேரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கார்த்திக்கேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு 2025 - 26 கல்வியாண்டில் 9ம் வகுப்பு படித்த 88 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கனார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.