தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கிளரிகல் பணியிடங்கள்
இந்தியாவில் இயங்கும் தனியார் வங்கிகளில் கிட்டத்தட்ட 89 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கப்பட்டு இன்றும் வெற்றிகரமாக இயங்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிமிகவும் புகழ் பெற்றது. தனியார் துறை வங்கிகளில் முதலிடத்தைப் பெற்றிருக்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீனமயமாக்கப்பட்ட செயல்பாடுகள், நாடுதழுவிய கிளைகள் போன்றவற்றிற்காக அனைவராலும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் கிளரிகல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்புதமிழ் நாடு மெர்க்கன்டைல் வங்கியின் கிளரிகல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 30.09.2010 அன்று பட்டதாரியாக இருந்தால் அதிகபட்சமாக 24 வயதுக்கு உட்பட்டவராகவும், முது நிலைப் பட்டதாரியாக இருந்தால் அதிகபட்சம் 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதில் எம்.பி.சி., பி.சி., பிரிவினருக்கு இரண்டு வருடங்களும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை உள்ளது. முழு விபரங்களறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும். கல்வித் தகுதிதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் கிளரிகல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முழு நேரப் படிப்பாக பட்டப்படிப்போ அல்லது முதுநிலை பட்டப்படிப்பையோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கூடுதலாகத் தேவைப்படும். தேர்ச்சி முறைதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் கிளரிகல் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம் ஆகிய மையங்களில் நடத்தப்படும். முழு விபரங்களுக்கு இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும். விண்ணப்பிக்கும் முறைதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் கிளரிகல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.200/க்கான டி.டி.,யை "Tamilnad Mercantile Bank Ltd" என்ற பெயரில் தூத்துக்குடியில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். இதன் பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரின்ட் அவுட்டுடன் தேவைப்படும் சான்றிதழ் நகல்களை இணைத்து 27.12.2010க்குள் கிடைக்குமாறு பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதால் உங்களுக்கான உபயோகத்திலுள்ள ஒரு இமெயில் முகவரி இருப்பதனை உத்திரவாதப்படுத்தவும். விண்ணப்பிப்பது குறித்த முழு விபரங்களை தமிழ் நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இணையதளத்தைப் பார்த்து அறியவும். முகவரிThe General Manager, Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Ltd. Head Office, # 57, V. E. Road, Thoothukudi 628 002. ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.12.2010விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 27.12.2010இணைய தள முகவரி: "www.tmb.in"