இந்திய மருத்துவக் கவுன்சிலில் உதவியாளர் பணியிடங்கள்
புது டில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய மருத்துவக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) பயோ மெடிக்கல் ஆராய்ச்சிகளுக்குப் பெயர் பெற்றதுடன் இத்துறையில் உலகிலுள்ள முக்கிய நிறுவனங்களில் மிகவும் தொன்மை வாய்ந்ததும் ஆகும். இந்த அமைப்பில் உதவியாளர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்புஇந்திய மருத்துவக் கவுன்சிலில் உதவியாளர் காலியிடத்திற்கு விண்ணப்பிக்க வயது 28க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதிஇந்திய மருத்துவக் கவுன்சிலில் உதவியாளர் காலியிடத்திற்கு ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாகப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகுதியுடன் ஸ்டோர்ஸ், ஆபிஸ் புரொசீஜர்ஸ், அக்கவுன்ட்ஸ் ஆகிய நிர்வாகப் பணி அனுபவம் பெற்றவர்களுக்கும், பி.ஜி.டி.சி.ஏ., டி.சி.ஏ., போன்ற கம்ப்யூட்டர் தொடர்புடைய தகுதிகளைக் கூடுதலாகப் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை உள்ளது. விண்ணப்பிக்கும் முறைமேற்கண்ட தகுதிகளைப் பெற்றவர்கள் ஒரு வெள்ளைத் தாளில் தங்களைப் பற்றிய முழு விபரங்களை நிரப்பி, ஒரு பாஸ்போர்ட் அளவிலான புகைப் படத்தை ஒட்டி, தகுதிக்கான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்துப் பின்வரும் முகவரிக்கு 07.01.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு விபரங்கள் அறிய இந்த அமைப்பின் இணைய தளத்தைப் பார்க்கவும். முகவரி Director, Regional Medical Research Centre for Tribals (ICMR), Nagpur Road, Garha P.O., Jabalpur (M.P.) - 482 003.