உள்ளூர் செய்திகள்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கு புதிய துணைவேந்தர்

சென்னை: திருநெல்வேலி அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின், புதிய துணைவேந்தராக ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியின் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் துறைத் தலைவர் ராஜாராமை கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா நியமித்துள்ளார். ராஜாராம், பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் அப்பதவியை வகிப்பார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்