பொருளாதார ஆய்விற்கு ஐ.ஐ.எம்-அகமதாபாத் நிதியுதவி
&'வளர்ந்துவரும் பொருளாதாரங்களைப்&' பற்றிய ஆய்வை மேற்கொள்ள ஒரு தனி நிதியமைப்பை ஏற்படுத்த முயன்றுவருவதாக ஐ.ஐ.எம்-அகமதாபாத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.ஐ.எம்-அகமதாபாத் வட்டாரங்கள் கூறியதாவது, "வளர்ந்துவரும் பொருளாதாரங்கள் சம்பந்தமான ஆய்வை மேற்கொள்ளும் நபர்கள், ஐ.ஐ.எம்-அகமதாபாத் -ஐ சாராதவர்களாக இருந்தாலும், இந்த நிதியிலிருந்து பயன்பெறலாம். ஒதுக்கப்படும் நிதி ஆதாரம் எவ்வளவு என்று இதுவரை சரியான விவரங்கள் இல்லையெனினும், போதுமான அளவிற்கு கணிசமாகவே இருக்கும். ஐ.ஐ.எம்-அகமதாபாத் அல்லாத வேறு கல்வி நிறுவனங்களை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், வளர்ந்துவரும் பொருளாதாரம் குறித்து ஆராய்ச்சி செய்ய, இந்த நிதி வேண்டி ஐ.ஐ.எம்-அகமதாபாத் -க்கு விண்ணப்பிக்கலாம். அதேசமயம் அந்த நிதி ஆதாரம் எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பு இன்னும் வரவில்லை. ஆனால் விரைவில் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தனர்.