புள்ளியியல் துறையில் முதுநிலை டிப்ளமோ படிப்பு
புள்ளியியல் வழிமுறைகள் பற்றி ஒரு வருட முதுநிலை டிப்ளமோ படிப்பை இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம்(ஐ.எஸ்.ஐ) வழங்குகிறது. ஆராய்ச்சி, கற்பித்தல், புள்ளியியல் பயன்பாடு, கம்ப்யூட்டிங், நேச்சுரல் சயின்சஸ் மற்றும் சோசியல் சயின்சஸ் துறைகளில் ஐ.எஸ்.ஐ. தன்னை ஏற்கனவே அர்பணித்துக் கொண்டுள்ளது. இந்த படிப்பானது வடகிழக்கில் புதிதாக திறக்கப்பட்ட திஸ்பூர்(அஸ்ஸாம்) மையத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்படிப்பில் சேர, நீங்கள் கணிதத்தை ஒரு பாடமாக கொண்ட இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.இ/பி.டெக். முடித்திருக்கலாம். மெரிட் அடிப்படையிலும், எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28 மார்ச். தேர்வு எழுதும் நாள் 8 மே. இதைப்பற்றிய மேலும் விவரங்கள் அறிய ஐ.எஸ்.ஐ. அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.