ஆசிரியர்-மாணவர் முறையான விகிதாச்சாரம் அமலாகுமா?
மத்திய பல்கலைக்கழகங்கள், யு.ஜி.சி. நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் இருக்க வேண்டிய ஆசிரியர்-மாணவர் விகிதாச்சார அளவை, யு.ஜி.சி. அமைத்த ஜே.ஏ.கே.தரீன் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. அந்த பரிந்துரைகளின் விவரம் வருமாறு: முதுநிலை பட்டப் படிப்புகள்: அறிவியல் பாடங்கள் - 1:10 மானுடவியல்/சமூகவியல் பாடங்கள் - 1:15 வணிகம் மற்றும் மேலாண்மை - 1:15 மீடியா மற்றும் மக்கள் தொடர்பு - 1:10 இளநிலை பட்டப் படிப்புகள்: சமூக அறிவியல் பாடங்கள் - 1:30 அறிவியல் பாடங்கள் - 1:25 பி.எட். - என்.சி.டி.இ. விதிகளின்படி. மீடியா மற்றும் மக்கள் தொடர்பு - 1:15 இந்த விவரங்களை மத்திய மத்திய மனிதவள இணையமைச்சர் புரந்தேஸ்வரி மக்களவையில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.