நீங்கள் விரும்புவது பயோமெடிக்கல் என்ஜினியரிங் துறையா?
பயோ மெடிக்கல் பாடப்பிரிவு அடிப்படையில் பொறியியலுடன் தொடர்பிருந்தாலும், அதன் பயன்பாடு மருத்துவத் துறைக்கு கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த துறையின் மூலமாக, பொறியியலுக்கும், மருத்துவத்திற்கும் இடையே உள்ள இடைவெளி நிரப்பப்படுகிறது. பயோ மெடிக்கல் துறையில் வடிவமைப்பு மற்றும் பிரச்சினையை தீர்க்கும் வகையில் பொறியியல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் கருவி, நோயாளிகளின் நோயைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் செயல்படுகிறது. புதிதாக உருவானதுதான் இந்த பயோ மெடிக்கல் என்ஜினியரிங். ஆனால், மற்ற அனைத்து பொறியியல் படிப்புகளை விடவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உருமாறி, தற்போது அதிக போட்டி நிறைந்த படிப்பாக உள்ளது. பி.எம்.இ. எனப்படும் பயோ மெடிக்கல் என்ஜினியரிங் பாடப்பிரிவு பல்வேறு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, பயோ இன்ஸ்ட்ரூமென்டேஷன்பயோ மெட்டீரியல்ஸ்பயோ மெக்கானிக்ஸ்செல்லுலர், டிஷ்யூ மற்றும் ஜெனடிக் என்ஜினியரிங்கிளினிக்கல் என்ஜினியரிங்மெடிக்கல் இமேஜிங்மெகாட்ரானிக்ஸ்ஆர்த்தோபேடிக் பயோ என்ஜினியரிங்ரிஹாபிலேஷன் என்ஜினியரிங்சிஸ்டம் பிஸியாலஜிபயோ நானோடெக்னாலஜிடெலி மெடிசின் பயோ மெடிக்கல் துறையின் பயன்பாடுபயோ மெடிக்கல் துறை இவ்வளவு முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம், பொறியியல், மருத்துவம், உயிரியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளுடன் தொடர்பு பெற்றிருப்பதுதான். இந்த துறையில் பல்வேறு முன்னேற்றங்களைக் கொண்டு வருவது, உடல் நலத்தைக் காப்பதற்கு பயன்படும். பயோ மெடிக்கல் பொறியாளர்கள், தாங்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு இயந்திரத்தினாலும் திருப்தியையும், மகிழ்ச்சியையும் அடைவார்கள். செயற்கை ரத்த நாளங்கள், நோயாளிகளை கண்காணிக்கும் கருவி, அல்ட்ரா சவுண்ட், மருத்துவத் துறையில் பணியாற்றும் ரோபோ என உயிரைக் காப்பாற்றும் கருவிகளை கண்டுபிடிப்பது என்பது எவ்வளவு மகத்தான சாதனையாகும். கல்வித் தகுதிஆர்.இ. எனப்படும் ரிஹாப்லிடேஷன் என்ஜினியரிங் பாடப்பிரிவில் சேர பிளஸ் 2 வகுப்பை முதல் நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 வில் அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்திருக்க வேண்டியது அவசியம். கல்வி நிலையங்கள்ஆறுபடை வீடு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அதியமான் காலேஜ் ஆப் என்ஜினியரிங், ஆல்பா காலேஜ் ஆப் என்ஜினியரிங், ஆல்பா என்ஜினியரிங் காலேஜ், அவினாசி லிங்கம் யூனிவர்சிட்டி பார் உமன், பன்னாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம், ராஜராஜேஸ்வரி, ராஜலட்சுமி, ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்வி நிலையங்களில் உயிரி மருத்துவ பொறியியல் பாடப்பிரிவினை நடத்துகிறது. அதில்லாமல், எய்ம்ஸ், புதுடெல்லி, பனாரஸ் ஹிந்து யூனிவர்சிட்டி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா, துவாரகாஸ் ஜே. சாங்வி காலேஜ் ஆப் என்ஜினியரிங், மும்பை ஆகியவையும் பயோ மெடிக்கல் என்ஜினியரிங் வழங்கும் கல்வி நிலையங்களாகும். இந்தியாவில் வாய்ப்புஇந்தியாவில் பயோ மெடிக்கல் படித்த பொறியாளர்களுக்கு பல அரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. மருத்துவக் கருவிகள், உபகரணங்கள் தயாரிப்புப் பணி, வடிவமைத்தல், உருவாக்கம் போன்ற துறைகளில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. மேலும், பல மருத்துவமனைகளில், நுண்ணிய மருத்துவக் கருவிகளைக் கையாள்வதற்கு, பொறியாளர்களின் ஆலோசனையைப் பெறுகின்றனர். பயோ மெடிக்கல் என்ஜினியரிங் படித்தவர்கள், ஒரு மருத்துவருடன் இணைந்து தங்களது பணியை செய்து கொண்டே, புதிய கருவிகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியிலும் ஈடுபடலாம். டெலிமெடிசின் துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. மருத்துவமனைகள் பலவும் தற்போது டெலிமெடிசின் துறையில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. வெளிநாட்டு வாய்ப்புபயோ மெடிக்கல் பொறியாளர்களுக்கு வெளிநாடுகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகள் பலவும், நோயாளிகளைக் கண்காணிக்கும் மருத்துவக் கருவிகளை வாங்கவும், பொருத்தவும், இயக்கவும், பயோ மெடிக்கல் படித்த பொறியாளர்களையே நியமிக்கின்றன. இவர்கள் மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில் செயல்படுவர். மருத்துவமனைகளில் உள்ள உபகரணங்களையும், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகளையும் அதன் முழுத் திறனுக்கும் இயக்க இதுபோன்ற பொறியாளர்கள் நிச்சயம் தேவை என்பதை ஒவ்வொரு மருத்துவமனையும் புரிந்துள்ளன. தற்போது மருத்துவத் துறையில் மாபெரும் கண்டுபிடிப்பாக, மனித உறுப்புகளை செயற்கையாக உருவாக்கும் ஆராய்ச்சி அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு வெளிநாட்டு ஆராய்ச்சி மையங்கள் பலவும், பயோ மெடிக்கல் படித்த பொறியாளர்களை இரு கரம் கொண்டு அழைக்கிறது. வெளிநாடுகளில் உள்ள பல மருத்துவமனைகள், கம்ப்யூட்டரை இயக்கும் திறன் கொண்ட பயோ மெடிக்கல் பொறியாளர்களை தங்களது டெலி மெடிசின் பிரிவிற்கு சேர்த்துக் கொள்கின்றன.