உள்ளூர் செய்திகள்

நன்றாக படிப்பதற்கும், நடத்தைக்கும் தொடர்பு உண்டா?

வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், 350 மாணவர்களை மொத்தம் 5 வருடங்கள் ஆய்வுசெய்து தங்களின் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள். நடத்தை சிக்கல் உள்ள மாணவர்களுக்கான 7 மாற்றுப் பள்ளிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், மாணவர் நடத்தைப் பற்றிய ஆசிரியரின் புரிதல் மற்றும் படிப்பில் அந்த மாணவரின் சாதனை ஆகியவை அளவிடப்பட்டன. அப்போது சில உண்மைகள் தெரிய வந்தன. பல ஆசிரியர்கள், வகுப்பறையில் நல்ல நடத்தையை வெளிப்படுத்தும் மாணவர்கள், நன்றாக படிக்கிறார்கள் என்று கூறியதோடு, அந்த மாணவர்களிடம் நிறைய எதிர்பார்ப்பையும் வைத்திருந்தார்கள். ஆனால் உண்மையில், வகுப்பறையில் நல்ல நடத்தை உள்ள பல மாணவர்கள்(அனைவருமே அல்ல), படிப்பில் சிறந்து விளங்க மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்களால் அது முடியவில்லை என்பதை ஆய்வாளர்கள் கண்டனர். ஒரு சிறப்பான கற்பித்தல் செயல்பாட்டிற்கு, பாடங்களை கற்றுக்கொடுப்பதை விட, வேறு பல திறன்களே முக்கியம் என்று ஆசிரியர்கள் நம்பும்போது மாணவர்கள் சரியாக செயல்படுவதில்லை. எனவே நடத்தை சிக்கல் உள்ள மாணவர்கள் விஷயத்தில், ஆசிரியர்கள், ஏதேனும் ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், பாடங்கள் மற்றும் நடத்தை ஆகிய இரு விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்