யுனானி மருத்துவம் குறித்த ஆய்வு ஒப்பந்தம்
அலிகார் முஸ்லிம் பல்கலையும், கொழும்பு பல்கலையும், யுனானி மருத்துவத் துறைக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், இணைந்து ஆய்வு செய்யவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அலிகார் முஸ்லிம் பல்கலையின் பதிவாளர் வி.கே. அப்துல் ஜலீல் - நாட்டின் அடிப்படை மருத்துவக் கல்வி மையத்தின் இயக்குநர் மருத்துவர் ஆர்.ஏ. ஜெயசிங்கே ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரண்டு கல்வி நிலையங்களும், யுனானி மருத்துவத்தைப் பற்றி அறிய செய்வதற்கான அனைத்து வழிகளையும் கண்டறிந்து அவற்றை செயல்முறைப்படுத்தவும், ஆராய்ச்சி மற்றும் கல்வி தொடர்பான பணிகளில் கல்வி நிலையங்களின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பரிமாறிக் கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. யுனானி மருத்துவம் குறித்த மாநாடு, கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் நடத்துவது என்றும் ஒப்பந்தத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.