உள்ளூர் செய்திகள்

எல்லையோர சாலைகள் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு

இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய அமைப்பாகவும், தேசத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதிலும் கடந்த 50 ஆண்டுகளாக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றுவதில் எல்லையோர சாலைகள் நிறுவனம் ( பார்டர் ரோட்ஸ் ஆர்கனிசேஷன் ) மிகவும் பெயர் பெற்றது. குறிப்பாக, போர் போன்ற நிகழ்வுகளின் போது இந்த நிறுவனத்தின் முக்கியத்துவம் அனைவராலும் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் சிவில் பிரிவில் 603 ஜூனியர் இன்ஜினியர்களைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவியில் எஸ்.சி., பிரிவினருக்கு 14 இடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு 63 இடங்களும் மீதமுள்ள 526 இடங்கள் ஓ.பி.சி., பிரிவினருக்கும் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினர் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது. வயது வரம்புபார்டர் ரோட்ஸ் ஆர்கனிசேஷனின் ஜூனியர் இன்ஜினியரிங் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இது குறித்த முழு விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும். கல்வித் தகுதிஎல்லையோர சாலைகள் நிறுவனத்தின் சிவில் பிரிவு ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு சிவில் இன்ஜினியரிங்கில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது சிவில் இன்ஜினியரிங்கில் லைசென்சியேட் தகுதி அல்லது மிலிட்டரி இன்ஜினியரிங் கல்லூரி மூலமாக சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி அடிப்படையில் பொருத்தமானவர்களுக்கு மட்டும் எழுத்துத் தேர்வு எழுத அனுமதி கிடைக்கும். இதன் அடிப்படையிலேயே தேர்ச்சி இருக்கும். விண்ணப்பக் கட்டணம்ஓ.பி.சி., பிரிவைச் சார்ந்தவர்கள் ரூ.50/ஐயும், எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ரூ.25/யும் கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தும் முறை பற்றி இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளவும். தேர்வு மையம்எல்லையோர சாலைகள் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் புனே ஜோன் என்ற அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பது எப்படிபார்டர் ரோட்ஸ் ஆர்கனிசேஷனின் இன்ஜினியரிங் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் சாதிச் சான்றிதழ் நகல்களையும் பரிந்துரைத்தபடி இணைக்க வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்தில் தெரிந்து கொண்டு, பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 12.04.2011க்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் "Application for the Post of Junior Engineer (Civil) Category SC/ST/OBC" என்று குறிப்பிட வேண்டும். முகவரிCommandant,GREF Cetre, Dighi Camp, Puneவிண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 12.04.2011இணைய தள முகவரி: www.bro.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்