உள்ளூர் செய்திகள்

இக்னோ அறிமுகப்படுத்தும் ஆன்லைன் பாடப்பிரிவு

டெல்லி: தி ஸ்கூல் ஆப் எக்ஸ்டென்ஷன் அண்ட் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் இணைந்து ஆன்லைன் லீடர்ஷிப் புரோக்ராம் ஆன் ஹிமாலயன் எகோசிஸ்டம்ஸ் என்னும் பாடப்பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாடப்பிரிவு விவசாயம், ஊரக வளர்ச்சி மேம்பாட்டுத் துறை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற துறையில் உள்ள விஞ்ஞானிகளுக்கும், கொள்கை உருவாக்கும் குழுவிற்கும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் டாக்டர் கரன் சிங் அவர்கள் இந்த பாடப்பிரிவை துவக்கி வைத்தார். இந்த படிப்பின் கால அளவு சுமார் ஒரு மாதம் முதல் ஆறு மாத காலமாகும். இந்த பாடப்பிரிவை பற்றி மேலும் விவரங்கள் அறிய http://www.ignou.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்